Crocodile Viral Video: சமூக வலைதளங்களில் அடிக்கடி பல்வேறு வகையான வீடியோக்கள் வைரலாவது வாடிக்கைதான். கிரிக்கெட் வீடியோக்கள், காமெடி வீடியோக்கள், அரசியல் தலைவர்களின் மேடை பேச்சுகள், சினிமா பிரபலங்களின் பேச்சுகள், விலங்குகள் சண்டையிடும் வீடியோக்கள் என இணையத்தில் எந்த வீடியோ எப்போது, எதற்காக வைரலாகிறது என்பது ஊகிக்கவோ, கணிக்கவோ முடியாது. பல வருடங்களுக்கு முன் வெளியான வீடியோக்கள் திடீரென இன்று மதியத்தில் இருந்து அதிகம் பரவும். காரணத்துடனும் இந்த வீடியோ அதிகம் பரவலாம், காரணம் இல்லாமலும் பகிரலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், இணையத்தில் வீடியோக்களுக்கு முக்கியத்துவம் இருக்கிறது. பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்கள், யூ-ட்யூபில் ஷார்ட்ஸ் வீடியோக்கள் என 1 நிமிடத்திற்குள் அடங்கும் குட்டி குட்டி வீடியோக்களின் ஆதிக்கமும் அதிகமாகிவிட்டது. அதாவது, ஒருவருக்கு ஒரு நல்ல வீடியோவை ஒரு நிமிடம் வரைதான் முழுதாக பார்க்க பிடிக்கிறது. சற்றே பெரிய வீடியோவாக இருந்து, அவை நன்றாக இருந்தால் கூட பலரும் விரல்களால் வீடியோவை தள்ளிவிட்டு அடுத்த வீடியோவுக்கு போய்விடுவார்கள். எனவே, ஒரு நிமிடம் ஒரு பார்வையாளரை நீங்கள் பார்க்கவைத்துவிட்டால் உங்களின் வீடியோ சக்சஸ் எனலாம். 


முதலை வாய்க்குள் கைவிட்ட நபர்


இப்படி வீடியோக்களின் ஆதிக்கம் சமூக வலைதளங்கள் முழுவதும் பரவியிருக்கிறது. அந்த வகையில், தற்போது முதலையிடம் சேட்டை செய்த இளைஞரின் திக் திக் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. ஏதோ மிருகக்காட்சி சாலை ஒன்றில் இருக்கும் பெரிய முதலையிடம், அங்கு பணியாற்றும் நபர் போல் இருக்கும் ஒருவர் விளையாட்டுத்தனமாக செயல்படுகிறார். உடனே அந்த முதலை செய்த செயல்தான் தற்போது இந்த வீடியோவை வைரலாக்கி உள்ளது.


மேலும் படிக்க | கண் இமைக்கும் நேரத்தில் கபாலென சரிந்து விழுந்த கட்டிடம்!! வைரல் வீடியோ..


சிவப்பு நிற ஆடை அணிந்துகொண்டு அந்த இளைஞன், அந்த முதலையிடம் விளையாடுகிறான். முதலை வாயை பிளந்து இருக்கும் சமயத்தில் வாய்க்குள் கையை நீட்டி விளையாட்டுக்காட்ட, உடனே முதலை சடார் என வாயை முடி கடித்துவிட்டது. இருப்பினும் உடனே பிடியை முதலை தளர்த்தியதால் அந்த நபர் கையை வெளியே எடுத்தார். இருப்பினும் அவரது கையில் பலமாக காயம் ஏற்பட்டது. அவர் வலியில் துடிப்பது வீடியோவிலேயே பார்க்க முடிந்தது.