கண் இமைக்கும் நேரத்தில் கபாலென சரிந்து விழுந்த கட்டிடம்!! வைரல் வீடியோ..

தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, கண் இமைக்கும் நேரத்தில் சீட்டுக்கட்டு போல கட்டடங்கள் சரிந்து விழுகிறது.

Written by - Yuvashree | Last Updated : Sep 30, 2024, 07:08 PM IST
  • கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்து விழுந்த கட்டடம்
  • காரணம் என்ன?
  • வேடிக்கை பார்த்தவர்களுக்கு மயக்கம்..
கண் இமைக்கும் நேரத்தில் கபாலென சரிந்து விழுந்த கட்டிடம்!! வைரல் வீடியோ.. title=

கைக்குள் உலகை அடக்கி விடலாம் என்பதற்கிணங்க, இப்போது அனைத்து விஷயங்களும் நொடிப்பொழுதில் போனில் பார்க்கும் வகையில் இருக்கிறது. கையில் இருக்கும் இந்த சிறிய டிவைஸை வைத்துக்கொண்டு, உலகில் தென்கோடியில் எங்கோ இருப்பவருடன் நம்மால் இணைய முடிகிறது என்பது இப்போது சகஜமான உண்மையாகி விட்டது. இப்படிப்பட்ட இந்த செல்போன் பயன்பாட்டில், பெரும் பங்கு வகிப்பது சமூக வலைதள பயன்பாடுதான். பல கோடி பேர் பயன்படுத்தும் இந்த சமூக ஊடகங்களில் எப்போதும் நல்ல விஷயங்களே வந்து விடுவது கிடையாது. சில நேரங்களில், நமக்கு தேவையற்ற விஷயங்களும் கண்ணில் தென்படலாம். பல நேரங்களில் நம் இதயத்தையே அதிர செய்யும் பயமுறுத்தும் விஷயங்களும் காண கிடைக்கலாம். அப்படிப்பட்ட ஒரு வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ:

தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஹெவியாக காற்று அடித்துக்கொண்டே இருக்கிறது. அப்படியே அதை சிலர் வீடியோ எடுத்துக்கொண்டிருக்கின்றனர். திடீரென்று பயங்கரமான சத்தம் ஒன்று கேட்க, அந்த பல மாடி கட்டடம் அப்படியே தரை மட்டமாகிறது.

கட்டடம் தரை மட்டமாவதை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தவர்கள், நில அதிர்வினால் அப்படியே சரிந்து கீழே விழுகின்றனர். ஆரம்பத்தில் அந்த கட்டடம் உடைந்ததற்கான காரணமும், அதை வேடிக்கை பார்த்தவர்கள் மயங்கி விழுந்ததற்கான காரணமும் பலருக்கு தெரியவில்லை. இதையடுத்து, கமெண்டில் பலர் அந்த கட்டடம் பாம் வைத்து தகர்க்கப்படுவதாகவும் அதற்கு அருகில் நின்று வீடியோ எடுத்தவர்கள்தான் இப்படி மயங்கி விழுவதாகவும் தெரிவித்து இருக்கின்றனர். ஒரு சிலர், இது அப்படியே பார்ப்பதற்கு Final Destination படத்தை பார்ப்பது போலவே இருப்பதாக கூறியிருக்கின்றனர். இது போல, கட்டடம் இடிந்து விழும் போது அதன் அருகில் நிற்பது மிகவும் ஆபத்து எனவும் விலை மதிப்பில்லாத உயிரை இது போன்ற விஷயங்களுக்காக இழக்க வேண்டாம் எனவும் பலர் எச்சரித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | கோவிலில் உண்டியல் காணிக்கையை திருடும் நபர்! வைரலாகும் வீடியோ!

மேலும் படிக்க | அந்தரத்தில் ஆபத்தாக புஷ்-அப் செய்யும் இளைஞர்! பார்த்தாலே பக்-பக்..வைரல் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News