Viral Video: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 


சில வீடியோக்கள் எதற்காக எடுக்கப்பட்டன என்றே நமக்கு விளங்காது. ஆனால், அவை இணையவாசிகள் இடையே முகவும் பிரபலம் ஆகிவிடும். இவை மிகவும் வித்தியாசமாக இருப்பதால், பதிவிடப்பட்ட உடனேயே இவை வைரல் ஆகி விடுவதும் உண்டு. அப்படி ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம். 


இந்த வீடியோவில் நீங்கள் அலாவுதினின் பூதமாகவும் குரங்காகவும் வேடமணிந்த இருவரை காண முடிகின்றது. இவர்கள் இருவரும் நடனமாடிக்கொண்டு இருக்கிறார்கள். இதை பார்க்க மிக வேடிக்கையாக இருக்கின்றது.


குடியிருப்பு காலனி போல இருக்கும் ஒரு இடத்தில், ஒரு கதவின் அருகில் அலாவுதினின் பூதம் போல வேடமணிந்த ஒருவர் நின்றுகொண்டிருக்க, குரங்கு போல வேடமணிந்த ஒருவர் மதில் சுவர் மீது அமர்ந்துகொண்டிருக்கிறார். இருவரும் திடீரென நடனமாடத் தொடங்குகின்றனர். குரங்கு வேடமிட்ட நபர் அமர்ந்தபடி ஆடுகிறார். ஆனால், திடீரென சுவர் மீது எழுந்து நின்று ஆடுகிறார். அருகில் இருக்கும் வீடுகளில் இருப்பவர்கள் இவர்களை வேடிக்கை பார்ப்பதை வீடியோவில் காண முடிகிறது. 


நடனமாடும் இருவரின் முகத்திலும் அப்பட்டமாக மகிழ்ச்சியை காண முடிகின்றது. இதை பார்ப்பவர்களுக்கும் இந்த மகிழ்ச்சி தொற்றிக்கொள்கின்றது. எந்த வித கவலையுமின்றி இவர்கள் அந்த நொடியை மகிழ்ச்சியாக கழிப்பதை பார்க்க நன்றாக உள்ளது. 


மேலும் படிக்க | Viral Video: ரயிலில் சாகசம் செய்த இளைஞர்! பிறகு என்ன ஆனது என்று பாருங்கள்!


உங்களை உடனடியாக சிரிக்க வைக்கும் சில்லி டான்ஸ் வைரல் வீடியோ:



இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் sachin_rao_attavar and shutterboxf என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். இதற்கு பலர் பல வித எமோஜிகளையும் பகிர்ந்து வருகிறார்கள்.


மேலும் படிக்க | சும்மா இருந்த சிறுத்தை... சீண்டிவிட்ட இளைஞர்கள் - அடுத்து நடந்ததை பார்த்தா ஷாக் ஆவீங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ