IPL 2021: நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அபாரமாக ஆடி இந்த சீசனில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தனர். இதில் பல வீரர்கள் அபாரமாக ஆடினாலும், அனைவரது கவனத்தையும் கவர்ந்தவர் CSK வீரர் ரவீந்திர ஜடேஜா.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரவீந்திர ஜடேஜா நேற்றைய ஆட்டத்தில், நான்கு கேட்சுகளை பிடித்ததோடு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரவீந்திர ஜடேஜா தனது ஆல்ரவுண்ட் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


தோனியின் 8 ஆண்டு பழைய ட்வீட் வைரலாகி வருகிறது


பவுண்ட்ரியில் ஃபீல்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா, 4 கேட்சுகளை பிடித்து அசத்திய பிறகு, மகேந்திர சிங் தோனியின் 8 ஆண்டு பழைய ட்வீட் ஒன்று வைரல் ஆகத் துவங்கியது. 9 ஏப்ரல் 2013 அன்று, தோனி (MS Dhoni) ஜடேஜா பற்றி ஒரு ட்வீட் செய்திருந்தார். அந்த ட்வீட்டில் அவர், "சர் ஜடேஜா ஒரு கேட்சை பிடிக்க அவர் ஓட வெண்டியதில்லை. பந்தே மைதானத்தில் அவரை தேடி கண்டுபிடித்து அவரது கையில் வந்து விழும்" என்று எழுதியிருந்தார். 



நான்கு கேட்சுகளை பிடித்து அசத்திய ஜடேஜா


ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி 8 ஆண்டுகள் முன்னர் ட்வீட்டில் கூறியது உண்மை என்பது நிரூபிக்கப்பட்டது. இந்த போட்டியில் ஜடேஜா, மனன் வோஹ்ரா, ரியான் பராக், கிறிஸ் மோரிஸ், ஜெய்தேவ் உனட்கட் ஆகியோரின் கேட்சுகளை பிடித்தார். ஜெய்தேவ் உனட்கட்டின் கேட்சைப் பிடித்தவுடன் ஜடேஜா ஒரு தனித்துவமான முறையில் அதைக் கொண்டாடினார்.


ALSO READ: IPL 2021: ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி அபார வெற்றி


கேட்சை எடுத்த பிறகு ஜடேஜா நான்கு என சைகை செய்தார்


ரவீந்திர ஜடேஜாவின் (Ravindra Jadeja)  கொண்டாட்டங்களைக் கண்டு அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். ரவீந்திர ஜடேஜா ஒரு கேட்சை பிடித்த பிறகு நான்கு என தன் கைகளால் சைகை செய்தார். போட்டியில் அவர் பிடித்த நான்கு கேட்சுகளை அவர் இப்படி காண்பித்தார். இதன் பின்னர், ரவீந்திர ஜடேஜா யாரையோ தொலைபேசி மூலம் அழைப்பது போல் செய்கை செய்தார். ஜடேஜாவின் இந்த கொண்டாட்டத்தை ரசிகர்கள் அனைவரும் ரசித்தனர்.



சச்சின் மற்றும் வார்னரின் சாதனையை சமன் செய்தார் ஜடேஜா


ஜடேஜாவுக்கு முன்னர், 6 வீர்ரகள் IPL போட்டிகளில், ஒரே போட்டியில் 4 கேட்சுகளை பிடித்துள்ளனர். 2008 ஆம் ஆண்டில், கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சச்சின் டெண்டுல்கர் நான்கு கேட்சுகளை பிடித்தார். சச்சினுக்குப் பிறகு, டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக 2010 ஆம் ஆண்டில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 4 கேட்ச்களை  பிடித்தார். இவர்களைத் தவிர, ஜாக் காலிஸ், ராகுல் தவாத்தியா, டேவிட் மில்லர், ஃபாஃப் டுப்ளெசிஸ் ஆகியோரும் IPL மேட்சுகளில் 4 கேட்சுகளை பிடித்துள்ளனர்.


ALSO READ: IPL 2021: DC vs MI, ஹாட்ரிக் வெற்றி பெறுமா மும்பை? டெல்லி - மும்பை மோதல்!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான 


செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR