இணையத்தில் நாம் பார்க்கும் வீடியோக்களில் பல விஷயங்கள் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் உறையச் செய்கின்றன. பல சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணைய உலகம் வேடிக்கையான உலகமாகும்.  இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் பார்த்து வருகிறோம். ஆனால், இயல்பான செயல்பாடுகளாக இருந்தாலும், பாம்புகளின் நடவடிக்கைகளால் ஏற்படும் ஆச்சரியம், வியப்பால் விழிகளை விரியச் சென்கின்றன.


பாம்பு மரத்தில் ஏறும் வீடியோ (Viral Video)  ஒன்று தற்போது வைரலாகிவருகிறது. மரம் ஏறும் போது வழுக்கும், அதிலும் பனை மரம் மிகவும் உயரமாக இருக்கும் என்பதால், பனைமரத்தில் ஏறுவதற்கு சிறப்பு பயிற்சி வேண்டும்.


"கன்செர்டினா லோகோமோஷன்" (concertina locomotion) என்று அழைக்கப்படும் பிடித்து  பிறகு அதை தளர்த்துவது என்ற இயக்கத்தின் அடிப்படையில் பாம்புகள் மரமேறும் என்ற விளக்கத்துடன் இந்த வீடியோவை பகிர்ந்த நெட்டிசன் தெரிவிக்கிறார்.


இந்த வீடியோவை பகிர்ந்திருப்பது சுசாந்தா நந்தா என்ற வனத்துறை அதிகாரி தான். அவர், @susantananda3 என்ற தனது டிவிட்டர் கணக்கில் இருந்து இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.



ஒரு மரத்தின் மீது S வடிவில் வளைந்து சென்று பலமுறை சுருண்டு மரத்தில் ஏறும் பாம்பின் வீடியோ ஆச்சரியம் ஏற்படுத்துகிறது. உண்மையில் பாம்பு மரம் மட்டுமல்ல, சுவரும் ஏறும் என்பது தெரியுமா?


இது மரமேறும் பாம்பு மட்டுமல்ல, மரத்தில் நடனமும் ஆடும் பாம்பு என்று பலரும் இந்த வீடியோவுக்கு கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video)  ஆகின்றன.சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள், குறிப்பாக பாம்புகளின் வீடியோக்கள் (Snake Video) இணையத்தை கலக்கி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ அனைத்து சமூக தளங்களிலும் பரவி வருகிறது.


இந்த வீடியோவில், சரசரவென்று மரத்தில் ஒரு மரமேறி போல ஏறும் பாம்பு, தனது செயல்களால் அதை நடனம் போல காட்டுகிறது. 


ALSO READ | Viral Video: 'நாங்களும் விளையாடுவோம்’ - பனியில் சறுக்கி ஆட்டம் போடும் யானைகள்..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR