தரையில் நடந்தால் தான் உண்மை தெரியும் EPS-யை மறைமுகமாய் தாக்கிய கமல்...
தரையில் கால் பாவிட, மக்களோடு மக்களாக நின்று பார்த்தால், கேட்டால்... புரியும் சோகம், தெரியும் உண்மை என தமிழக முதல்வரை மறைமுகமாய் தாக்கிய கமல்ஹாசன்....
தரையில் கால் பாவிட, மக்களோடு மக்களாக நின்று பார்த்தால், கேட்டால்... புரியும் சோகம், தெரியும் உண்மை என தமிழக முதல்வரை மறைமுகமாய் தாக்கிய கமல்ஹாசன்....
கடந்த நவம்பர் 15-ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. எனினும் சில பகுதிகளில் போதுமான வசதிகள் இன்னும் வந்த சேரவில்லை என மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், முன்னதாக கஜா புயல் பாதிப்பைத் தொடர்ந்து நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிடு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, சமீபத்தில் கஜா புயலார் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். இந்தர்க்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டர் பதிவுஒன்றை இட்டுள்ளார். அதில், "தரையில் கால் பாவிட, மக்களோடு மக்களாக நின்று பார்த்தால், கேட்டால்... புரியும் சோகம், தெரியும் உண்மை! ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் இவை தெரியாது. கேட்கிறதா அரசுக்கு?" என தமிழக அரசை மறைமுகமாக தாக்கியுள்ளார்.