கருப்பு காலாவில் இருந்து காவியாக மாறிய ரஜின்யின் 'பேட்ட' பட அரசியல்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் தற்போது ரஜினி நடித்து வருகிறார். இதில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். விஜய் சேதுபதி, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். முதன்முறையாக மாமா ரஜினியின் படத்துக்கு இசையமைக்கிறார் அனிருத். 


இதன் படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வரும் வேலையில் இப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், படத்தின் பெயர், மோஷன் போஸ்டர் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியானது. ரஜினி ரசிகர்களிடையே இந்த மோஷன் போஸ்டர் பெரும் வரவேற்ப்பை ஏற்படுத்தியது. 



சமீபத்தில் வெளியான கபாலி, காலா என இரண்டு படங்களிலும் இயக்குனர் ரஞ்சித் மூலமாக ரஜினி இடதுசாரி அரசியல் பேசி இருந்தார். கருப்பு உடை, அம்பேத்கார், பெரியார் என்று இடதுசாரிகள் அரசியல் நேரடியாகவும், பல்வேறு குறியீடுகள் மூலமும் வெளிப்படுத்தினர். இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த இரண்டு படத்துக்கும் பாஜக தரப்பில் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த நிலையில் காலா படத்தில் முழுக்க முழுக்க கருப்பு உடையில் வளம் வந்த ரஜினி தற்போது பேட்ட படத்தில் காவி உடையில் வலம் வருகிறார். 


இதையடுத்து, ரஜினி காவி உடையில் படப்பிடிப்பின் பொது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.