சினிமா பாணியில் ஸ்டண்ட்.. காருக்குள் நீச்சல் குளம் யூடியூபர் Sanju Techy கைது
Sanju Techy Swimming Pool Viral Video: கேரளாவில் பிரபலமான யூடியூபரான சஞ்சு சஞ்சு டெக்கி, `ஆவேசம்` படத்தில் வருவதை போல தனது காரினுள் நீச்சல் குளத்தை உருவாக்கி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
Kerala YouTuber Sanju Techy Viral Video: கேரளாவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர், ஃபகத் ஃபாசில் நடித்த 'ஆவேசம்' என்ற பிரபலமான மலையாள திரைப்படத்தால் ஈர்க்கப்பட்டு, அபாயகரமான முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
யூடியூபர் சஞ்சு சஞ்சு டெக்கி காரில் நீச்சல் குளம்
சஞ்சு சஞ்சு டெக்கி தனது காரில் தற்காலிக நீச்சல் குளத்தை உருவாக்க, காரில் தார்ப்பாய் சீட்டை போட்டு தண்ணீர் நிரப்பி வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவில், சஞ்சுவும் அவரது நண்பர்களும் காருக்குள் உருவாக்கப்பட்ட தற்காலிக நீச்சல் குளத்தில் நீந்திக்கொண்டு, இளநீரை குடித்தபடி நெடுஞ்சாலையில் காரில் பயணிக்கிறார்கள்.
அப்பொழுது ஓட்டுநர் இருக்கை மற்றும் என்ஜினுக்குள் தண்ணீர் புகுந்ததால் பிரச்சனை தொடங்கியது. பீதியடைந்த சஞ்சு, காரை ஓட்டிச் சென்ற தனது நண்பனிடம் கதவைத் திறந்து காரில் இருக்கும் தண்ணீரைக் காலி செய்யும்படி கூறினார்.
சாலையின் நடுவே காரை நிறுத்தி, அவசர அவசரமாக தண்ணீரை வெளியேற்றிய போது அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையில் தண்ணீர் நிரம்பியதால் பொதுமக்களுக்கு கடுமையான இடையூறு ஏற்பட்டது.
மேலும் படிக்க - Viral Video: டேட்டிங்கிற்கு RATE CHART போட்ட இளம் பெண்.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ!
யூடியூபர் சஞ்சு சஞ்சு டெக்கி வீடியோ வைரல்
இந்த நீச்சல் குள வீடியோ வைரலானதை அடுத்து, யூடியூபர் சஞ்சு சஞ்சு டெக்கியை பொதுமக்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்த விவகாரம் வாகனத் துறை (எம்விடி) கவனத்திற்கு சென்றதை அடுத்து, பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதற்காக பிரபல யூடியூபர் மீது மோட்டார் வாகனத் துறை கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.
சஞ்சு டெக்கிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதில் அவர் மீது ஆபத்தான வாகனம் ஓட்டுதல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுகள் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல் சாலை போக்குவரத்து அதிகாரி முன் ஆஜராக வேண்டும் எனவும் சம்மனில் கூறப்பட்டிருந்தது.
யூடியூபர் சஞ்சு சஞ்சு டெக்கிக்கு தண்டனை வழங்கிய மோட்டார் வாகனத் துறை
இதனையடுத்து பிரபலமான யூடியூபர் சஞ்சு சஞ்சு டெக்கி, சாலை போக்குவரத்து அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜரானார். அப்பொழுது சஞ்சு மற்றும் காரில் இருந்த மற்ற மூன்று பேருக்கும் ஒரு வாரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சமூக சேவை செய்யவும், போக்குவரத்து துறையின் பயிற்சி திட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
குடிமைப் பொறுப்பு மற்றும் சாலைப் பாதுகாப்பின் மதிப்பைப் பற்றி மாணவர்களுக்குக் கற்பிப்பதற்காக இந்த தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், காரை ஓட்டிய நபரின் ஓட்டுநர் உரிமம் ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்படும். மேலும் வாகனத்தின் பதிவுச் சான்றிதழுக்கான பயன்பாடும் நிறுத்தி வைக்கப்பட்டது என மூத்த வாகனத் துறை அதிகாரி கூறினார்.
மேலும் படிக்க - எவரெஸ்டிலும் ஏற்பட்ட கூட்ட நெரிசல்! நீண்ட வரிசையில் நிற்கும் வைரல் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ