Viral Video: டேட்டிங்கிற்கு RATE CHART போட்ட இளம் பெண்.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ!

Rental Girlfriend Rate Chart: டேட்டிங்கிற்கு ரேட் பிக்ஸ் செய்து இன்ஸ்டாவில் ரேட் சார்ட்டை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 30, 2024, 02:06 PM IST
  • டேட்டிங்கிற்கு ரேட் பிக்ஸ் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டு இளைஞர்களை இளம் பெண்.
  • திரைப்படத்திற்கு சென்று விட்டு இரவு உணவு சாப்பிடுவதற்கு 2000 ரூபாய்.
  • இரண்டு நாட்கள் வெளியூர் சுற்றுலா செல்வதற்கு 10 ஆயிரம் ரூபாய் விலை.

Trending Photos

Viral Video: டேட்டிங்கிற்கு RATE CHART போட்ட இளம் பெண்.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ! title=

Girlfriend Rate Chart Instagram Reel: சமூக வலைதளங்கள் பொழுதுபோக்கு இடமாக இருந்த நிலை மாறி தற்போது லைக்ஸ்காகவும், பாலோவர்ஸ்காகவும் இவர்கள் செய்யும் அட்ராசிட்டி ஒவ்வொரு நாளும் எல்லை மீறிக் கொண்டே இருக்கிறது. பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்து வண்ணம் நடனமாடுவது,  உயிரை பணயம் வைத்து சாகசம் செய்வது, அரைகுறை ஆடைகளுடன் நேர வேளையில் தோன்றுவது என நாளுக்கு நாள் இவர்களின் யுக்திகள் மாறி வருகிறது. இந்த வரிசையில் தற்போது வந்துள்ள புதிய அப்டேட் தான் டெல்லியைச் சேர்ந்த இந்த இளம் பெண். 

டேட்டிங்கிற்கு ரேட் பிக்ஸ் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டு இளைஞர்களை சூடேற்றிய சம்பவம் தான் டெல்லி வெயிலையும் தாண்டி பரபரப்பாக பேசப்படுகிறது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 
 
 
 

 
 
 
 
 
 

A post shared by Divya Giri (@divya_giri__)

டெல்லியை சேர்ந்த இளம்பெண் (@divya_giri) வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் சில்லான காபி குடிக்க 1500 ரூபாயும், திரைப்படத்திற்கு சென்று விட்டு இரவு உணவு சாப்பிடுவதற்கு 2000 ரூபாய் எனவும் நிர்ணயித்துள்ளார். குடும்பத்தினை சந்தித்து பேசுவதற்கு 3 ஆயிரம் ரூபாய் என ரேட் பிக்ஸ் செய்து  அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க - முத்தம் கொடுத்தது ஒரு குத்தமா... மணமகனை அடித்து துவைத்த மணப்பெண் வீட்டார்..!!

அடுத்ததாக பைக்கில் நீண்ட தூரம் பயணம் செல்வதற்கு 4 ஆயிரம் ரூபாயும் எனவும், இதில் இலவச இணைப்பாக கையை பிடித்துக் கொள்ளலாம் என சலுகையும் கொடுத்துள்ளார். அடுத்ததாக டேட்டிங் சென்றதை சமூக வலைதளத்தில் போட்டோவாக பதிவிடுவதற்கு 6000 ரூபாய் என ரேட் நிர்ணயித்துள்ளார்.

அடுத்த கட்டமாக வீட்டில் இருவரும் சேர்ந்து சமைத்து சாப்பிடுவதற்கு 3500 ரூபாயும், வெளியில் ஷாப்பிங் செல்வதற்கு 4,500 சாகச பயணம் செல்வதற்கு 5ஆயிரம் ரூபாய் என்றும் நிர்ணயித்துள்ளார். வார விடுமுறை நாட்களில் இரண்டு நாட்கள் வெளியூர் சுற்றுலா செல்வதற்கு 10 ஆயிரம் ரூபாய் ஆகும் விலை நிர்ணயித்து அட்டவணை வெளியிட்டுள்ளார் அந்த இளம்பெண்.

இந்த இளம் பெண்ணின் முந்தைய பதிவுகள் சில பொருட்களை விளம்பரப்படுத்தி பதிவிட்டுள்ளார். எனவே இந்த பதிவு உண்மையா இல்லை இளைஞர்களை கவர்ந்து ஃபாலோர்ஸை அதிகப்படுத்தவா? என்ற கேள்விவும் எழுகிறது.

மேலும் படிக்க - கொதிக்கும் வெயிலில் இப்படி ஜாலியா இருந்தா நல்லாருக்குமே? ஏங்கும் நெட்டிசன்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News