வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகள் / பறவைகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


பல்வேறு வகையான பாம்புகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஆபத்தானவை. இவற்றில் சில பாம்புகள் ஒருமுறை கடித்தாலே போது, மரணம் சம்பவிக்கும். மனிதனைப் பொறுத்தவரை, பாம்புகள் தங்கள் அருகில் கூட வரக்கூடாது என்றுதான் அனைவரும் நினைக்கிறார்கள். எனினும், சில மனிதர்களும், விலங்குகளும், பறவைகளும் அவ்வப்போது பாம்புகளுக்கே பல்பு காட்டுவது உண்டு. 


கழுகும் அப்படிபட்ட ஒரு பறவைதான். பாம்பை பார்த்ததும் அது தாக்கத் தொடங்கிவிடும். சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவிலும் இதுபோன்ற ஒரு காட்சியை காண முடிகின்றது. 


மேலும் படிக்க | நாயை தூக்கிச்செல்லும் சிறுத்தை: திகிலூட்டும் சிசிடிவி காட்சிகள் 


பறவையை தாக்கிய பாம்பு
வைரலாகி வரும் இந்த வீடியோ-வில், கரடுமுரடான பாறையில் ஒரு விசித்திரமான பாம்பு மறைந்திருப்பதை காண முடிகின்றது. ஆனால் அப்போது ஒரு பறவையின் பார்வை அதன் மீது விழுந்தது. இந்த பறவை பார்ப்பதற்கு கழுகு போல் உள்ளது. அது பாம்பை தாக்குகிறது. ஆனால் இந்த தாக்குதல் அதற்கே ஆபத்தாகி விடுகிறது. சினம் கொண்ட பாம்பு பறவையின் முகத்தை கவ்விக்கொள்கிறது. 


பறவை தானாக வந்து பாம்பிடம் மாட்டிக்கொண்டதாக அனைவருக்கும் தோன்றுகிறது. ஆனால், அங்குதான் ஒரு ட்விஸ்ட் காத்துள்ளது. தன்னுடைய அசாத்திய பலத்தால், பறவை பாம்பின் பிடியிலிருந்து தப்பித்து விடுகிறது. 


பாம்புக்கு பல்பு கொடுத்த பறவையின் வீடியோவை இங்கே காணலாம்: