வீட்டுக்குள் நுழைந்த நாகப்பாம்பை பின்னி பெடலெடுத்த நாய்: ஷாக் ஆகாம பாருங்க.. வைரல் வீடியோ
Viral Video: சமீபத்தில் ஒரு வீடியோ இணையத்தில் பட்டையை கிளப்பி வருகின்றது. இதில் விலங்குகளுக்கு இடையிலான ஒரு வித்தியாசமான நிகழ்வை காண முடிகின்றது.
Viral Video: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
சமீபத்தில் ஒரு வீடியோ இணையத்தில் பட்டையை கிளப்பி வருகின்றது. இதில் விலங்குகளுக்கு இடையிலான ஒரு வித்தியாசமான நிகழ்வை காண முடிகின்றது. வீடியோவில் ஒரு பாம்புக்கு நாய்க்கும் இடையில் கடுமையான சண்டை நடக்கின்றது. இந்த சண்டை பார்ப்பதற்கு பயங்கரமாக உள்ளது. ஜென்ம விரோதியை போல நாய் பாம்பை பின்னி எடுக்கிறது. பாம்பு பிற விலங்குகளை பலியாக்குவதைத் தான் நாம் பெரும்பாலும் பார்த்துள்ளோம். ஆனால், இங்கு காட்சி முற்றிலும் மாறுபட்டுள்ளது. நாயின் கோவத்தை பாம்பால் சுத்தமாக தாக்குப்பிடிக்க முடியவில்லை.
ஜென்னி என்ற பெயர் கொண்ட இந்த பிட் புல் வகை நாய் ஜான்சியில் ஒரு வீட்டில் வளர்க்கப்படுகின்றது. அந்த வீட்டில் நுழைந்த நாமப்பாம்பை தாக்கி, கொன்று, இந்த நாய் வீட்டில் உள்ள குழந்தைகளின் உயிரை காப்பாற்றியுள்ளது. இந்த சம்பவம் செப்டம்பர் 23, திங்கட்கிழமை, ஜான்சியின் சிவகணேஷ் காலனியில் நடந்துள்ளது.
ஒரு வீட்டில், அங்கு வேலை செய்பவரின் குழந்தைகள் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கொடிய பாம்பைக் கண்ட குழந்தைகள் உதவிக்காக அலறினார்கள். தோட்டத்தின் மறுமுனையில் கட்டப்பட்டிருந்த ஜென்னி, இதைக் கண்டதும் விரைவாகச் செயல்படத் தொடங்கியது. அது தான் கடப்பட்டிருந்த பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு நாகப்பாம்பை எதிர்கொள்ள விரைந்தது.
தற்போது வைரல் ஆகி வரும் இந்த வீடியோவில், ஜென்னி நாகப்பாம்பை தனது வாயில் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு, பாம்பை அடக்குவதற்காக ஆக்ரோஷமாக தலையை ஆட்டுவதைக் காண முடிகின்றது. பாம்புக்கும் நாய்க்கும் இடையிலான இந்த சண்டை சுமார் ஐந்து நிமிடங்கள் நீடித்தது. நாகப்பாம்பு நாயிடமிருந்து விடுபட பல முயற்சிகளை எடுத்தது. ஆனால், அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியில் நாய் பாம்பை காயப்படுத்தி கொன்றது.
பாம்பை பின்னிப் பெடலெடுத்த நாயின் வீடியோவை இங்கே காணலாம்: