வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்புக்கும் கீரிக்கும் உள்ள பகை அனைவரும் அறிந்ததே. பாம்பு கீரி சண்டை வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி பகிரப்படுகின்றன. இரண்டும் எதிர் எதிரே வந்தால் அங்கு ஒரு பெரிய சண்டை மூள்வது உறுதி. பாம்பு கீரியை பார்த்தால் அதற்கு முழு பலம் வந்துவிடும். அது முழுமையான ஆக்ரோஷத்துடன் அதை தாக்கத் துவங்கும். இதில் கீரிப்பிள்ளையும் குறைந்தது அல்ல. கீரியும் பாம்பை கண்ட உடனேயே அதை முழு முனைப்புடன் தாக்கத் தொடங்குகிறது. இரண்டும் சமமாக சண்டை இட்டாலும், தனது வேகம் மற்றும் சுறுசுறுப்பு காரணமாக, அதிக முறை கீரிதான் பாம்பின் மீது வெற்றி கொள்கிறது. அது ஒரு சில நொடிகளில் பாம்பை தோற்கடித்து அதை தன் இரையாக ஆக்குகிறது. 


தற்போது மீண்டும் ஒரு பாம்பு கீரி வீடியோ வெளிவந்துள்ளது. எனினும், இது சற்று வித்தியாசமானது. இதில் பாம்பும் கீரிக்கு நிகராக சண்டையிடுகிறது. கீரிப்பிள்ளை பாம்பை எதிர்கொள்ள முடியாமல் வியந்து நிற்பதையும் வீடியோவில் காண முடிகின்றது. 


மேலும் படிக்க | குட்டிக்காக உயிரை பணயம் வைத்த தாய் குரங்கு: இணையத்தை அழ வைத்த வைரல் வீடியோ 


விசித்திரமான ஒரு வீடியோ


சமூகவலைத்தளங்களில் வைரலாகும் இந்த வீடியோ-வில், ஒரு ராஜ நாகம் தன் பாதையில் சென்று கொண்டிருக்கும்போது, அதன் முன் ஒரு கீரி வருவதை காண முடிகின்றது. பாம்பை பார்த்த கீரி அதை தாக்க திட்டம் தீட்டுகின்றது. ஆனால், அதன் திட்டமே அதற்கு அபாயத்தை அளித்தது. கீரி நாகப்பாம்பை தாக்கியவுடன், மிகப்பெரிய எதிர் தாக்குதலை பாம்பு அளித்தது. இதை கீரி எதிர்பார்க்கவில்லை. இந்த விடியோவில் கேட்கப்படும் சத்தமே சண்டையின் வீரியத்தைக் காட்டுகின்றது. 


கீரி முதலில் பாம்பை தாக்கியவுடன் பாம்பு விரைவாக பின்வாங்கியது. அதன் பிறகு பாம்பும் கீரிக்கு பதிலடி கொடுக்கிறது. பாம்பின் சுறுசுறுப்பைக் கண்டு கீரியும் பின்வாங்க வேண்டியதாயிற்று. பாம்பும் கீரியும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல என காட்டும் வகையில் தீவிரமாக சண்டை இடுகின்றன. இருப்பினும், இறுதியில் இரண்டும் பின்வாங்க வேண்டியிருந்தது.


பாம்பு கீரி மாஸ் சண்டையை இங்கே காணலாம்: 



பாம்பு, கீரி சண்டையின் இந்த வீடியோ சமூக ஊடகங்களின் பல்வேறு தளங்களில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் animals_powers என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


மேலும் படிக்க | ராஜ நாகத்தை உயிருடன் விழுங்கிய 20 அடி ராட்சத மலைப்பாம்பு: வீடியோ வைரல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ