குட்டிக்காக உயிரை பணயம் வைத்த தாய் குரங்கு: இணையத்தை அழ வைத்த வைரல் வீடியோ

Emotional Monkey Video: குரங்குகளின் ஒரு வீடியோ இணையவாசிகளை அழ வைத்துள்ளது. இதில் காணப்படும் குரங்கின் தாய்ப்பாசம் நம் மனதை உலுக்குகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 20, 2023, 12:15 PM IST
  • விலங்குகளில் குரங்குகள் இணையத்தின் செல்லப்பிள்ளைகள் என்றே கூறலாம்.
  • குரங்குகளின் ஏராளமான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.
  • மனிதர்கள் செய்யும் செயல்களை குரங்குகளும் அப்படியே செய்கின்றன.
குட்டிக்காக உயிரை பணயம் வைத்த தாய் குரங்கு: இணையத்தை அழ வைத்த வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

விலங்குகளில் குரங்குகள் இணையத்தின் செல்லப்பிள்ளைகள் என்றே கூறலாம். குரங்குகளின் ஏராளமான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. மனிதர்கள் செய்யும் செயல்களை குரங்குகளும் அப்படியே செய்கின்றன. மனிதர்களின் உணர்வுகளும் குரங்குகளுக்கு இருக்கின்றன. இந்த உணர்வுகளில் தாயன்பு மிக முக்கியமான ஒன்று. தாய் குரங்குகள் தங்கள் குட்டிகளுக்காக எதிர்கொள்ளும் பல ஆபத்துகளையும், செய்யும் துணிச்சலான பல செயல்களையும் நாம் இணையத்தில் பார்த்துள்ளோம்.

தற்போது தாயன்பின் அதீத உணர்வை எடுத்துக்காட்டும் மற்றொரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் தன் குட்டி குரங்குக்காக ஒரு தாய் குரங்கு தன் வாழ்க்கையையே பணயம் வைத்து செய்யும் செயலை காண முடிகின்றது. வீடியோவின் துவக்கத்தில் தன் குழந்தையை தன் கைகளில் மெதுவாகத் தழுவியபடியே தாய் குரங்கு மரத்தின் மீது ஏறுவதை காண முடிகின்றது. 

குரங்கு குட்டியை தன் கைகளில் பத்திரமாகப் பிடித்துக் கொண்டு, குழந்தை வழுக்கி விழாமல் தாய் குரங்கு  பார்த்துக் கொள்கிறது. இந்த காட்சி தாய் குரங்கின் உள்ளுணர்விற்கும், தன் குட்டியின் மீது அது கொண்ட அன்புக்கும் சான்றாகும்.

மேலும் படிக்க | ராஜ நாகத்தை உயிருடன் விழுங்கிய 20 அடி ராட்சத மலைப்பாம்பு: வீடியோ வைரல்

குட்டி குரங்கு இந்த மர ஏற்றத்தை ரசிப்பது போல் தோன்றுகிறது. அது தனது தாயின் அணைப்பில் முற்றிலும் பாதுகப்பாக உணர்கிறது. ஒரு கட்டத்தில் ஒரு மரக்கிளையிலிருந்து மற்றொரு மரக்கிளைக்கு தாவ வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. அப்போது, இரு கிளைகளுக்கும் இடையில் உள்ள இடைவெளி அதிகமாக இருப்பதால், குட்டி குரங்கால் தாண்ட முடியாது என தாய் குரங்கு புரிந்துகொள்கிறது. அதனால் அது செய்யும் செயல் காண்பவர்களை வியப்பில் ஆழ்த்துகின்றது. தாய் குரங்கு இரு கிளைகளுக்கும் இடையில் தன் உடலை பாலம் போல் அமைத்துக்கொள்கிறது. குட்டி குரங்கு தாய் குரங்கின் மீது ஏறி அடுத்த கிளைக்கு செல்கிறது. 

குட்டி குரங்கை பாதுகாப்பாக மற்ற கிளைக்கு அழைத்துச்செல்ல தாய் குரங்கு எதிர்கொள்ளும் அபாயம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. தாய் குரங்குக்கும் அதன் குட்டிக்கும் இடையே உள்ள பந்தம் சிறப்பு வாய்ந்தது. மனிதர்களைப் போலவே, தாய் குரங்குகளும் தங்கள் குட்டிகளை மிகவும் பாதுகாப்பாக வளர்க்கின்றன. 
 
குரங்கின் தாய் பாசத்தை விளக்கும் அந்த வைரல் வீடியோவை இங்கே காணலாம்:

மனிதர்களுக்கும் குரங்குகளுக்கும் இடையில் வேறுபாடுகள் இருந்தாலும், நம் சந்ததியினருக்கு நாம் வழங்கும் அன்பு மற்றும் பாதுகாப்பில் பொதுவான பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதை இந்த வீடியோ நினைவூட்டுகிறது.

தாய் குரங்கு மற்றும் அதன் குட்டியின் இந்த வீடியோ தாய்க்கும் குழந்தைக்கும் இடையே இருக்கும் அன்பை இனம் பாராமல் எடுத்துக்காட்டுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். குரங்கின் தாயன்பை அனைவரும் வியந்து பராட்டி வருகிறார்கள். இந்த வீடியோ தங்களை கண்கலங்க வைத்ததாக பலர் கமெண்ட் செய்துள்ளனர்.

மேலும் படிக்க | காட்டுப்பன்றியை சாதுர்யமாக வேட்டையாடும் கில்லாடி புலி: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News