வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் பாம்பு, குரங்கு, சிங்கம், புலி, நாய், பூனை என இந்த விலங்குகளுக்கு எப்போதும் மவுசு அதிகம். இவற்றின் பல வீடியோக்கள் தினமும் இணையத்தில் பகிரப்படுகின்றன. இவற்றில் பலவற்றை நம்மால் நம்ப முடியாது, நம்பாமல் இருக்கவும் முடியாது. 


தற்போதும் அப்படிப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. வேட்டையாட சென்ற விலங்கு தானே சிக்கிக்கொண்ட வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. பாம்பு மற்றும் தவளைக்கு இடையில் நடக்கும் சண்டையை இதில் காணிறோம். இதில் இறுதியில் வரும் காட்சி நம்மை ஆச்சரியப்படுத்துகின்றது. 


வேட்டைக்காரனே இரையான சம்பவம்


சில நொடிகள் கொண்ட இந்த வீடியோவில், ராஜ நாகம் ஒன்று இரை தேடி அங்கும் இங்கும் அலைவதை முதலில் காண முடிகின்றது. அப்போது அது அங்கு ஒரு தவளையை காண்கிறது. தனக்கு ஒரு எளிதான இரை கிடைத்துவிட்டது என அது மகிழ்கிறது. தவளைகளை பாம்புகள் உண்பது காலம் காலமாக நடந்துவருவதுதான். ஆனால், இந்த வீடியோவில் நமக்கு ஒரு ட்விஸ்ட் காத்திருக்கிறது. 


தவளையை பார்த்த பாம்பு அதை உடனே தாக்குகிறது. ஆனால் சில நொடிகளில் எல்லாம் மாறிவிட்டது. வேட்டையாட சென்ற விலங்கே இங்கு இரையாகி விடுகிறது. 


மேலும் படிக்க | Viral Video: மலை பாம்பை கபளீகரம் செய்யும் ராட்சஸ பாம்பு... மனம் பதற வைக்கும் வீடியோ!


பாம்பு தாக்கிய உடனேயே, தவளையும் உடனடியாக பதிலடி கொடுத்து பதில் தாக்குதல் செய்கிறது. மிகவும் சாதுர்யமாக நடந்துகொண்ட தவளை பாம்பின் வாலை கெட்டியாக தன் வாயில் கவ்விக்கொள்கிறது. இதை பாம்பு எதிர்பார்க்கவில்லை. பாம்பின் வாலை வாயில் பிடித்த தவளை அதை மெதுவாக இழுக்க ஆரம்பிக்கிறது. வீடியோவில் காணப்படும் இந்த காட்சி அனைவரையும் அதிர வைக்கிறது. 


அதிர வைக்கும் வீடியோவை இங்கே காணலாம்: 



வேட்டையாட வந்த பாம்பு, தவளையிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள கடுமையாக முயற்சித்தும், அதன் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியடைவதை வீடியோவில் காண முடிகிறது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் animals_powers என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இது குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான லைக்குகளையும் வியூஸ்களையும் பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


மேலும் படிக்க | Video Viral: ஆழி அலைகளுக்குள்ளும் அசராமல் நிற்கும் லைட் ஹவுஸ்! ஆனந்த் மகேந்திரா வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ