நாகப்பாம்பு VS கீரி.. வெற்றி யாருக்கு: மிரள வைக்கும் வைரல் வீடியோ
King Cobra vs Mongoose Fight Video: கீரிப்பிள்ளை அங்கிருந்த ராஜ நாக பாம்பை எளிதாக இரையாகக் கொள்ளலாம் என்று கருதித் தாக்கியது, ஆனால் இறுதியாக நடந்தை கண்டால் நீங்களும் ஒரு கணம் அதிர்ச்சியடைந்துவிடுவீர்கள்.
பி கீரிப்பிள்ளை விஷமுள்ள பாம்புகளை கொல்லும் திறனுக்காக புகழ் பெற்றவை. ரூட்யார்ட் கிப்ளிங் தி ஜங்கிள் புக் பாம்பின் விஷத்தை எதிர்த்து போராடும் தன்மை கீரிப்பிள்ளைகளுக்கு உண்டு என்றும் நொடியில் பாம்பின் செயலை கண்டறிந்து தப்பி ஓடும் தன்மையும் அவைகளுக்கு உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கீரியும்-நச்சுகொண்ட நாகமும் சம எதிரிகளாக மோதுவதைப் பலரும் பார்த்திருக்கலாம். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் கீரிப்பிள்ளை நடுங்காது. அந்தவகையில் நீங்கள் இதுவரை கீரி – பாம்பு சண்டையை பார்த்தது இல்லை என்றால் இந்த வீடியோவைப் பாருங்கள்.
கீரி மற்றும் அரச நாகப்பாம்பு எதிரில் வந்தன
தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், ராஜ நாகம் இரை தேடி அங்கும் இங்கும் அலைவதை வீடியோவில் காணலாம். அப்போது தான் கீரி மற்றும் பாம்பு நேருக்கு நேர் வருகிறது. இங்கே கீரி நாகப்பாம்பை எளிதான இரையாக்கிக் கொள்ளலாம் என்று கருதி, உடனடியாக தாக்க முயற்சிக்கிறது. தோட்டாவின் வேகத்தில் அந்த பாம்பை நெருங்கி தாக்கியது கீரிப்பிள்ளை. பாம்பின் கழுத்துக்குக் கீழே கீரிப்பிள்ளை தாக்கி அதைக் கட்டுப்படுத்த முயன்றதைக் காணலாம். கீரிப்பிள்ளை தான் இப்போது எளிதாக வென்று பாம்பை வேட்டையாடும் என்பது போல் வீடியோவில் தெரிகிறது.
மேலும் படிக்க | குரங்கு கையால் ஆப்பிள் சாப்பிடும் ஆமை: நெகிழவைக்கும் வைரல் வீடியோ
ஆனால், இறுதியில் கடுப்புடன் எழுந்த அந்த ராஜ நாகம் கீரிப்பிள்ளையின் வாயைத் தாக்கத் தொடங்கியது. கீரிப்பிள்ளையை மீண்டும் மீண்டும் அந்த பாம்பு கடிக்கிறது. சிறிது நேரத்தில் கீரிப்பிள்ளை படுகாயமடைந்தது. இப்போது பாம்பு தனது பிடியை இறுக்க ஆரம்பித்து, மெதுவாக கீரிப்பிள்ளையின் உடலை சுற்றிக்கொள்ள ஆரம்பித்தது. இதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதை வீடியோவில் நீங்கள் காணலாம்.
வீடியோவை இங்கே காணுங்கள்:
பாம்புக்கும் கீரிப்பிள்ளைக்கும் இடையே நடக்கும் இந்த ஆபத்தான சண்டையின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோ குறுகிய நேரத்தில் ஆயிரக்கணக்கான லைக்குகளையும் பார்வைகளையும் குவித்துள்ளது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களும் கடுமையாக கமெண்ட் செய்து வருகின்றனர். இது இன்ஸ்டாகிராமில் beautiful_new_pixandwild_animal_pix என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ