பெண்ணை சுற்றிக்கொண்டு படம் எடுத்த நாகப்பாம்பு: திகிலூட்டும் வைரல் வீடியோ

Scary Cobra Video: இந்த வீடியோ உங்களை அச்சத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும். படுத்திருந்த ஒரு பெண்ணை நாகப்பாம்பு சுற்றிக்கொண்டு படம் எடுத்தது? பிழைத்தாரா பெண்?

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 4, 2023, 12:12 PM IST
  • சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள்.
பெண்ணை சுற்றிக்கொண்டு படம் எடுத்த நாகப்பாம்பு: திகிலூட்டும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

பாம்புகளை பார்த்தால் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓடுகிறார்கள் என்றாலும், இணையத்தில் பாம்பைதான் அனைவரும் விரும்பி பார்க்கிறார்கள். பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவற்றில் பல வீடியோக்கள் நம்மை அச்சத்தின் உச்சிக்கு கொண்டு செல்கின்றன. 

தற்போது கிங் கோப்ரா தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வயலில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் மீது ஒரு ராஜநாகம் ஏறி அவரைச் சுற்றி படம் எடுத்து நிற்பதை வீடியோவில் காண முடிகின்றது. தன்னை ஒரு ராஜநாகம் சுற்றியிருப்பதை உணர்ந்த பெண், அதிர்ச்சியடைகிறார். ஆனால், அச்சப்படாமல் அவர் மிகவும் புத்திசாலித்தனமாக நடந்துகொள்கிறார். எந்த வித அசைவும் இன்றி அப்படியே படுத்திருக்கிறார் அந்த பெண். 

பெண்ணை சுற்றிகொண்ட நாகப்பாம்பு

எந்த வகையான பாம்பை பார்த்தாலும் மக்களின் நிலை மோசமாகிறது. பாம்புகளை எப்போதும் தாங்கள் எதிர்கொள்ளக்கூடாது என்றுதான் அனைவரும் நினைக்கிறார்கள். எனினும், சில சமயம் இந்த வீடியோவில் உள்ளது போன்ற சிக்கலான சூழ்நிலைகளில் நாம் சிக்கிக்கொள்கிறோம். 

மேலும் படிக்க | தம்பி... நீ ராஜாவா - அங்க ஓரமா போய் விளையாடு - சிங்கத்தை மிரட்டும் நீர்யானை 

இந்த வீடியோவில் காணப்படும் காட்சி யாரையும் அதிர்ச்சி அடைய வைக்கும். இங்கு திடீரென ஒரு நாகப்பாம்பு தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் மேல் ஏறி அவரை முழுவதுமாக சுற்றிக் கொள்கிறதுது. பெண் மெதுவாக குடும்ப உறுப்பினர்களை அழைக்கத் தொடங்குகிறார். பெண்ணைச் சுற்றிலும் மேலும் சில வீட்டு வளர்ப்பு மிருகங்களும் காணப்படுகின்றன.

திகிலூட்டும் நாகப்பாம்பு வீடியோவை இங்கே காணலாம்: 

நாகப்பாம்பு பற்றிய இந்த அரிய வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்த் நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சிறிது நேரம் கழித்து பாம்பு எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாமல் அங்கிருந்து சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். பெண்ணின் சமயோஜித புத்தியையும், சிக்கலான சூழலை துணிவுடன் சமாளித்த விதத்தையும் அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

மேலும் படிக்க | Viral Video: சீறிய பாம்பை புரட்டி எடுத்த பூனை! இணையவாசிகளை வியக்க வைத்த வீடியோ! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News