நாம் நினைத்துப் பார்க்காதவை நடந்தால் அதிசயம், ஆச்சரியம், திகைப்பு என பல்வேறு உணர்ச்சிகள் ஏற்படும். இந்த இணையதள காலத்தில் இப்படி மாறுபட்ட உணர்வுகள் அடிக்கடி எழுகிறது என்றால் அதில் வியப்பேதும் இல்லை. கையில் மொபைல் இருந்தால் போதும், கண் முன்னே நடக்கும் வித்தியாசமான நிகழ்வுகளை படம் பிடித்து சமூக ஊடகங்களில் பதிவேற்றினால், பலரும் பார்க்கிறனர். மிகவும் வித்தியாசனமான வீடியோக்களும், புகைப்படங்களும் பதிவுகளும் வைரலாகின்றன.
 
இந்த வீடியோவை பார்த்தால் அசந்து போவது நிச்சயம். ஒரு விமானி, இரண்டு சுரங்கங்கள் வழியாக விமானத்தை இயக்குகிறார். இந்த கற்பனைக்கும் எட்டாத செயல் சமூக ஊடகங்களில் வைரலாகிறது. நெட்டிசன்களை திகைக்க வைக்கிறது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது வெறும் வைரல் வீடியோ மட்டுமல்ல, விமானி சுரங்கப்பாதை வழியாக விமானத்தை இயக்குவது புதிய உலக சாதனையாகவும் பதிவாகியிருக்கிறது. இந்த வித்தியாசமான வீடியோ சமீபத்தில் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.



உலக சாதனை படைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் ஆபத்தான மற்றும் முரட்டுத்தனமான விஷயங்களைச் பார்த்திருக்கிறோம், ஆனால் இந்த குறிப்பிட்ட வீடியோ இணைய பயனர்களை வாயடைக்கச் செய்துவிட்டது. சுரங்கப்பாதையில் விமானத்தை பறக்கச் செய்வதே கடினம் என்ற நிலையில் விமானி இரண்டு சுரங்கப்பாதைகள் வழியாக விமானத்தை பறக்கச் செய்து புதிய உலக சாதனை படைத்திருக்கிறார்.


இந்த வீடியோவை பார்க்கும் அனைவரையும், தங்கள் இருக்கைகளின் விளிம்புக்கு வந்துவிடும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் இந்த ஸ்டண்ட்டை (stunt) செய்தவர் இத்தாலிய விமானி டாரியோ கோஸ்டா (Italian pilot, Dario Costa). ட்விட்டரில் ரெட் புல் (Red Bull) பதிவேற்றிய இந்த ஸ்டண்டின் வீடியோ, ஒரே இரவில் வைரலானது.


Also Read | Take it sportive! பாலியல் வாழ்க்கை பற்றிய கேள்விக்கு ஒலிம்பிக் தங்க மகன் நீரஜ் சோப்ராவின் பதில் என்ன?


ரெட் புல், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வீடியோவுடன் இவ்வாறு பதிவிட்டுள்ளார்:  "டாரியோ கோஸ்டா இரண்டு சுரங்கப்பாதைகள் வழியாக விமானம் ஓட்டிய முதல் நபர் என்ற சாதனையைப் படைத்தார்.  நாங்கள் ஒன்றும் பேசாமல் வாய்சடைத்துப் போயிருக்கிறோம்".


வீடியோவில், இத்தாலிய விமானி டாரியோ கோஸ்டா, துருக்கியில் அமைந்துள்ள இரண்டு சுரங்கப்பாதைகள் வழியாக விமானத்தை பறக்கச் செய்வதைக் காணலாம். இந்த ஸ்டண்டின் வீடியோ உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்களை திகைக்க வைத்துள்ளது. குறுகிய சுரங்கப்பாதை (tunnel) வழியாக விமானத்தைப் பறக்கச் செய்யும் விமானி கோஸ்டாவின் திறமை அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்படுத்துகிறது.  


இந்த வித்தியாசமான சாகசத்தை நிகழ்த்தியதன் மூலம், இரண்டு சுரங்கங்கள் வழியாக விமானத்தை பறக்கச் செய்த முதல் விமானி (pilot) என்ற சாதனையை கோஸ்டா ஏற்படுத்தியுள்ளார். அனைவரையும் வாயடைக்கச் செய்த கோஸ்டாவின் திறமை, மிக நீளமான சுரங்கப்பாதைகளை விமானம் மூலம் கடந்தவர் என்ற கின்னஸ் உலக சாதனையை உருவாக்கியுள்ளது.


Also Read | New Fashion Bikini: பிகினியும், முகக்கவசமும்… இது நவீன பாணி உடையலங்காரம்!
 
துருக்கியின் இஸ்தான்புல்-லில் (Istanbul) உள்ள கதல்கா மாவட்டத்தில் இந்த சாகசம் நடத்தப்பட்டது. ரெட் புல் பதிவேற்றிய வீடியோவின் படி, இரு சுரங்கப்பாதைகளை (2.26 கிமீ தூரத்தை) 245 கிமீ வேகத்தில் 44 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தார் பைலட் கோஸ்டா.  


"எல்லாம் மிக வேகமாக நடப்பதாகத் தோன்றியது, ஆனால் முதல் சுரங்கப்பாதையிலிருந்து நான் வெளியே வந்தபோது, விமானம் (Plane) வலதுபுறம் நகரத் தொடங்கியது. காற்று வீசிய திசையும் வேகமும் தான் அதற்கு காரணம். உடனே நான் துரிதமாக செயல்பட்டேன். இரண்டாவது சுரங்கப்பாதையில் நுழைய சரியான கோணத்தில் விமானத்தை திரும்ப பெறுவதில் கவனம் செலுத்தினேன். விமானம் மீண்டும் வேகமெடுத்தது" என்று சாதனை விமானி டாரியோ கோஸ்டா (Dario Costa) கூறியதாக ரெட் புல் பதிவிட்டுள்ளது.


செப்டம்பர் 4 ஆம் தேதி ரெட் புல் பதிவேற்றிய இந்த காணொளி (video) ட்விட்டரில் கிட்டத்தட்ட 7 லட்சம் பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ஒருமுறை பார்ப்பதுடன் மட்டும் நிறுத்திக் கொள்ள முடியாது என்ற அளவுக்கு சுவாரசியமாக இருக்கிறது. நெட்டிசன்கள் இத்தாலிய விமானி டாரியோ கோஸ்டாவுக்கு தங்கள் அன்பான வாழ்த்து மழையை பொழிகின்றனர்.  


Also Read | ‘Not said by me, thank you’! என்ற ரத்தன் டாட்டாவின் விளக்கத்திற்கான காரணம்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR