கோலிவுட்டின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக பாராட்டப்படும் கார்த்திக் சுப்புராஜின் பிறந்தநாளான இன்று பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரை மண்ணுக்குச் சொந்தக்காரரான கார்த்திக் சுப்புராஜ், பீட்சா படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். கோலிவுட்டின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜின் பிறந்தநாளான இன்று பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.   


இயக்குநர் தனுஷ், கார்த்திக் சுப்பராஜுக்கு டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.



கார்த்திக் சுப்புராஜின் திரைப்படங்கள் அனைத்துமே பிரபலமானவை. ஜிகர்தண்டா, பேட்ட,  ஜகமே தந்திரம், சியான் 60, புத்தம்புதுக் காலை என அவரது திரைப்படங்கள் அனைத்துமே ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை.


Also Read | தியானமே சிறந்த பரிசு - ரசிகர்களுக்கு சமந்தாவின் சிபாரிசு


மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பு படித்த கார்த்திக் சுப்புராஜ், 2012ம் ஆண்டு வெளிவந்த பீட்சா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் அறிமுகமானார்.


இயக்குநராக மட்டுமல்லாமல், திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களையும், சின்னத்திரை தொடர்களையும் தயாரிப்பவர் கார்த்திக் சுப்பராஜ். பென்குயின், அவியல், மேயாத மான் என்ற திரைப்படங்களை தயாரித்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.


கள்ளச்சிரிப்பு என்ற வலைத்தொடரை தயாரித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, அங்கும் தனது தனி முத்திரையை பதித்தவர் கார்த்திக் சுப்பராஜ். 


Also Read | ஐந்து இந்திய மொழிகளில் வருகிறது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி!


‘காட்சிப்பிழை’ என்ற குறும்படத்தின் மூலம் நாளைய இயக்குநர் என்ற தொலைகாட்சி நிகழ்ச்சியில் முத்திரை பதித்த கார்த்திக் சுப்புராஜ், இயக்குநராக என்றுமே காட்சிகளில் பிழைகளை வைத்ததில்லை.


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்!!!


Also Read | Data Theft: OTPகள் பாதுகாப்பாக இல்லை, SMS மூலம் தரவுகள் திருட்டு   


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR