Viral Video : மனிதர்களின் மனம், ஒரு நேரம் போல மறு நேரம் இருக்காது. ஒரு சிலர் அமைதியாக இருப்பர், ஆனால் அவர்களது உணர்ச்சிகள் தடம் மாறும் போது வேறு ஆளாக நடந்து கொள்ள ஆரம்பித்து விடுவர். ஒரு சிலர், தந்திரமாக நடித்து பிறரை ஏமாற்றுவர், ஒரு சிலருக்கு பொய்யாக கூட ஒருவரை சிரித்து ஏமாற்றாமல் இருப்பர். பலருக்கு சில சமயங்களில் “வாழ்வில் எந்த தடை ஏற்பட்டாலும் அதை எதிர்த்து போராட வேண்டும்” என்று தோன்றும், இன்னும் சில சமயங்களில் “தன்னால் எதுவுமே செய்ய முடியாது” என்று தோன்றும். அப்படி தோன்றும் சமயங்களில் பலர் தவறான முடிவுகளை எடுத்து, உயிரை மாய்த்துக்கொள்வர். ஒரு சிலர், அதிர்ஷ்டவசமாக அதிலிருந்து காப்பாற்றப்படுகின்றனர். ஒரு சிலர், உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். அப்படி அவசரப்பட்டு முடிவெடுத்த ஒரு இளைஞரின் வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைரல் வீடியோ:


உத்திர பிரதேசத்தில் இருக்கும் நொய்டா செக்டார் 74-ல்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு இளைஞர், வீட்டில் இருந்து வேலை பார்த்து வந்திருக்கிறார். அப்போது, அவருக்கு வேலை போயுள்ளதாக மெயில் வந்ததாக கூறப்படுகிறது.  இதைக்கேட்டு நொந்து போன அவர், 12வது மாடியில் இருந்து கீழே குதிக்க முயற்சி செய்திருக்கிறார்.



12வது மாடி பால்கனி திண்டில் நின்று கொண்டு குதிக்க யோசித்துக்கொண்டிருக்கும் அவரை, “குதிக்க வேண்டாம்” என்று அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டு நிறுத்த முயற்சிக்கின்றனர். இதையடுத்து, அந்த மாடியில் ஏறும் சிலர் அந்த இளைஞரை குண்டுக்கட்டாக அப்படியே தூக்குகின்றனர். இந்த வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


(தற்கொலைக்கு முயல்வது எதற்கும் முடிவல்ல: தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், சினேகா அமைப்பின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம்.)


மேலும் படிக்க | காரை தண்ணீரில் ஓட்டி லைசன்ஸ் வாங்கும் நபர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!


மேலும் படிக்க | இந்த எருமையின் விலை 23 கோடியா! என்ன காரணம் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ