Video Of  TVK Vijay Vikravandi Conference Venue : தமிழ் திரையுலகின் டாப் நடிகராக விளங்கும் நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியை தொடங்கினார். கட்சியை தொடங்கிய போதே, தான் 2026ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் நேரடியாக போட்டியட இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, தவெக கட்சியின் முதல் மாநாடு, விக்கரவாண்டி தொகுதியில் அக்டோபர் 27ஆம் தேதியான நாளை நடைபெற இருக்கிறது. இதையடுத்து, மாநாடு நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மக்கள் அமரும் இடத்திற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தவெக முதல் மாநாடு:


நடிகர் விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்தில் இருந்தே, பலர் அவரது அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தின் பெரிய அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக, நாதக உள்ளிட்ட கட்சிகள் விஜய்யின் ஒவ்வொரு அசைவையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. 


தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநாடு, விக்கரவாண்டி தொகுதியில் உள்ள வி.சாலையில் நடைபெற இருக்கிறது. இதில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், விஜய் நடப்பதற்காக மேடையை ஒட்டி பெரிய ராம்ப் போடப்பட்டிருக்கிறது. அத்துடன் சேர்த்து, வந்து செல்பவர்களுக்கு தேவையான கழிப்பறை வசதி, பார்க்கிங் வசதி, உணவு, தண்ணீர் உள்ளிட்ட வசதிகளும் செய்து தரப்பட்டிருக்கின்றன.


மாநாட்டில் அனைவரும் ஒழுக்கத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என்று கண்டீஷன் போட்ட நடிகர் விஜய், தனது கட்சியினருக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். பல லட்சம் மக்கள் கூடும் இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யும் வண்ணம் பல நூறு போலீஸார்களும் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.


360° வீடியோ


மாநாட்டு திடலில், மக்கள் அமரும் இடம் முதல், விஜய் நடந்து வர இருக்கும் ராம்ப் மேடை வரை அனைத்தும் அடங்கிய ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், ஆங்காங்கே பொறுத்தப்பட்டிருக்கும் மெகா லைட்கள், மேடை, கட் அவுட்கள் ஆகியவை காண்பிக்கப்பட்டிருக்கிறது.