“இந்தியில் பேசுங்க” வேறு மொழி பேசியவரை அதட்டிய பெண்-மெட்ரோவில் வெடித்த சண்டை!
Viral Video Of A Woman Saying You Must Speak Hindi : மெட்ரோ ரெயிலில் சக பயணியை இந்தியில் பேச சொல்லி அதட்டிய பெண்ணின் வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.
Viral Video Of A Woman Saying You Must Speak Hindi : இந்தியா முழுவதும், இந்தி திணிப்பு என்பது கண்களுக்கே தெரியாமல் நடந்து வருவதாக, சில அரசியல் கட்சிகள் தெரிவிக்கின்றன. பல்வேறு தென்னிந்திய மாநிலங்களில் இந்தி திணிப்பிற்கு எதிராக குரல்கள் ஒலித்து வருகிறது. அதிலும் தமிழகம் குறித்து கேட்கவே வேண்டாம். இருப்பினும், இங்கிருக்கும் சில விவரம் தெரியாதவர்கள், “இந்தி கற்றுக்கொள்வது நல்லது” என கூறுவதை கேட்டிருப்போம்.
இந்தியாவை பொறுத்தவரை, இங்கு பல நூறு மொழி பேசும் மக்கள் இருக்கின்றர். இவர்கள் அனைவரையும், அவர்களின் தாய் மொழியை விடுத்து, இந்தியை கற்றுக்கொள்ள சொல்வது தகுமா? இந்தி பேசுபவர்கள் பெரும்பான்மையானவர்களாக இருந்தாலும், அரசை தேர்ந்தெடுக்கும் அதிகாரமும், நாடு எப்படி செல்ல வேண்டும் என்ற அதிகாரமும் அவர்களுக்கு மட்டும் இருப்பதில்லையே? இப்படி பல கேள்விகளை தூண்டுகிறது, தற்போது இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்று.
மெட்ரோவில் நடந்த சண்டை:
கொல்கத்தா மெட்ரோவில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு, ஒரு பெண் எதிரே பெங்காலி மொழியில் உரையாடி இருக்கின்றனர். இது எப்படியோ சண்டையாக மாற, அதற்கு அந்த பெண், “இந்தியாவில் வாழ்ந்து கொண்டு உங்களுக்கு இந்தி தெரியவில்லையா?” என கேட்டிருக்கிறார். அதற்கு வங்காள மொழியில் பேசியவர், “உங்களுக்கு உங்கள் தாய்மொழி பேச உரிமை இருப்பது போல், பிற மொழிகளுக்கு இல்லையா?” என கேட்டிருக்கிறார். இது பின்னர் சண்டையாக உருவெடுத்திருக்கிறது. வங்காள மொழி பேசியதால் அவரை Bangladeshi என்றும் அந்த பெண் அழைத்திருக்கிறார்.
வைரல் வீடியோ:
தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், அந்த பெண் பேசுவது ரெக்கார்ட் ஆகி இருக்கிறது. வங்காள மொழி பேசியவர்களை திட்டிய அந்த பெண், “நீங்கள் ஒன்னும் வங்காள தேசத்தில் இல்லை. இந்தியாவில் இருக்கிறீர்கள். மேற்கு வங்காளம் இந்தியாவின் ஒரு பகுதி. அதனால் நீங்கள் இந்தியில் பேசியாக வேண்டும். இந்தியாவில் வாழும் உங்களுக்கு வங்காள மொழி தெரிகிறது. ஆனால் இந்தி தெரியாதது ஏன்? என்று கேட்கிறார்.
அதற்கு சக பயணி, “நான் மேற்கு வங்காளத்தில் வசிக்கிறேன். இது என்னுடைய சொந்த ஊர். உங்கள் ஊர் கிடையாது. நீங்கள் என் மாநிலத்தில் இருந்துக்கொண்டு வங்காள மொழி பேசுவதற்காக என்னை அவமானப்படுத்த முடியாது.” என்று கூறியிருக்கிறார்.
அதற்கு அந்த பெண், “இந்த மெட்ரோவோ, மேற்கு வங்காளமோ உங்களுக்கு சொந்தம் கிடையாது” என்று பேசியிருக்கிறார். அதற்கு அந்த பயணி “இது என்னுடைய மெட்ரோ, நானும் என் மாநிலத்திற்கு வரி செலுத்துகிறேன்” என்று கூறியிருக்கிறார்.
இந்த வீடியோவின் முடிவில், அந்த பெண் தன் அனுமதி இல்லாமல் தன்னை வீடியோ எடுத்ததற்காக உங்கள் மீது கேஸ் போடுவேன் என்றும் கூறியிருக்கிறார். ஆனால் சமூக வலைதளமே அந்த பெண்ணிற்கு எதிராக கிளம்பியிருக்கிறது. ஒரு சிலர், இந்தியாவில் 40% பேர்தான் இந்தி பேசுவதாகவும், அப்படியிருக்கம் பட்சத்தில் அனைவரையும் இந்தி கற்றுக்கொள்ள சொல்வது எந்த வகையில் சரி என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க | திருமண நிகழ்ச்சியில் பணமழை! மாப்பிள்ளை வீட்டார் அட்ராசிட்டி..வைரல் வீடியோ..
மேலும் படிக்க | திருமண மேடையில் உயிரிழந்த வாலிபர்! நண்பர்கள் எதிரிலேயே நேர்ந்த சோகம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ