Viral Video Of Grooms Family Showering Money : நாடு முழுவதும் திருமண வைபவங்கள் நடைபெறும் சீசன் ஆரம்பித்து விட்டது. இதையடுத்து இணையத்தில் பணமழை பொழியும் ஒரு குடும்பத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video Of Grooms Family Showering Money : நாடு முழுவதும் திருமண வைபவங்கள் நடைபெறும் சீசன் ஆரம்பித்து விட்டது. முன்பெல்லாம் மாப்பிள்ளை கையில் மணப்பெண்ணை பிடித்துக்கொடுப்பதுடன் சடங்கு முடிந்து விடும். ஆனால், இப்போது அப்படியில்லை. திருமணத்திற்கு 2 நாட்களுக்கு முன்பு ஒரு சடங்கு, திருமணம் ஆன அன்று ஒரு சடங்கு, திருமணம் முடிந்து பெண் மாமியார் வீட்டிற்கு போகும் போது ஒரு சடங்கு என ஆயிரத்தெட்டு சடங்குகள் இருக்கின்றன. ஆனால்..என்கிறிந்து வந்தது இந்த பணத்தை வாரி வழங்கும் சடங்கு என்பதுதான் யாருக்கும் தெரியவில்லை.
பணத்தை மழை போல கொட்டும் மாப்பிள்ளை வீட்டார்!
தங்கள் இல்லத்தில் ஒருவருக்கு, அல்லது தனது குடும்பத்தில் ஒருவருக்கு திருமணம் ஆகி விட்டது என்றால் பலருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி பிறக்கும். இந்த மகிழ்ச்சி தாளாமல், கட்டி அணைத்து, ஆடி-பாடி கொண்டாடி தீர்ப்பர். திருமணத்திற்கு வருபவர்களுக்கு தடபுடலாக விருந்து வைத்து, ஏழை-எளியவர்களுக்கு சாப்பாடு போட்டு அந்த மகிழ்ச்சியை தீர்த்துக்கொள்வர். ஆனால் இங்கு ஒரு தரப்பினர், தங்கள் வீட்டு பையனுக்கு திருமணம் ஆன மகிழ்வான நிகழ்வினை காசு மழையாக தூவி, கொண்டாட்டத்தில் திளைத்திருக்கின்றனர்.
வைரலாகும் வீடியோ:
இந்த வீடியோ, உத்திர பிரதேசம், சித்தார்த்தன் நகரில் எடுக்கப்பட்டிருக்கிறது. திருமணத்திற்கு வந்திருக்கும் விருந்தினர்களுக்கும், கிராமத்தினருக்கும் மாப்பிள்ளை வீட்டார் சுமார் ரூ.20 லட்சத்தை காசு மழையாக பொழிந்திருக்கின்றனர். இது குறித்து வைரலாகும் அந்த வீடியோவில், ஒரு மேற்கூறையின் மேலும், ஜேசிபி இயந்திரத்தின் மேலும் நிற்கும் 4-5 பேர் 100, 200, 500 ஆகிய ரூபாய் நோட்டுகளை வாரி வாரி இறைக்கின்றனர். இவர்களுக்கு கீழே நின்று கொண்டிருப்பவர்கள் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு நிற்கின்றன்றனர்.
நெட்டிசன்கள் கருத்து:
இது போன்ற வேலையை செய்பவர்கள், படித்த முட்டாள்களாக இருப்பதாக கூறி வருகின்றனர். சில பணக்காரர்கள் டேக்ஸ் பணத்தை கட்ட வேண்டாம் என்பதற்காகவே இது போன்ற செய்ல்களில் ஈடுபடுவதாக தெரிவிக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ