நெல்சன் திலீப் குமார் இயக்கும் 'பீஸ்ட்' திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜார்ஜியாவில் இதன் முதல்கட்டப் படப்பிடிப்பை நடத்தினார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். இந்த படத்திற்க்கு இசை அமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜார்ஜியா படப்பிடிப்பு முடிந்த பின் சென்னையில், ஷாப்பிங் மால் அரங்கம் அமைத்து அதில் பீஸ்ட் (Beast) படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்தினர். பிறகு சென்னை புறநகரில் மூன்றாம்கட்ட படப்பிடிப்பை நடத்தினர். இதுவரை மூன்றுக்கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நான்காம்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. அதன்படி செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் டெல்லியில் படப்பிடிப்பை நடத்தப்பட்டு வருகிறது.


ALSO READ: தளபதி விஜய்யுடன் சேர்ந்து நடிப்பதை வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன் பீஸ்ட் பட நாயகி புகழாரம்


இதுவரை மூன்றுக்கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நான்காம்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. அதன்படி செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் டெல்லியில் படப்பிடிப்பை நடத்தப்பட்டு வருகிறது. 


இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகள் இணையதளத்தில் கசிந்துள்ளன. அதாவது பீஸ்ட் திரைப்பட காட்சி என்று வெளியாகியுள்ள இந்த 38 விநாடிகள் கொண்ட வீடியோவில் ஒரு ஷாப்பிங் மாலில் இருந்து நடிகர் விஜய் (Actor Vijay) ரத்த கறையுடன் நடந்து வருவதுபோல் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ லீக்கானது படக்குழுவினரை பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


இந்த வீடியோவை யாரும் பகிர வேண்டாம் என்று நடிகர் விஜயின் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. எனினும் ஒரு சிலர் இந்த வீடியோவை வேகமாக பரப்பி வருகின்றனர். இந்தக் காட்சிகள் எப்படி கசிந்தது என்பது தொடர்பாக படக்குழுவினர் தீவிரமாக விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதற்கிடையில் இந்தத் திரைப்படம் வரும் 2022ஆம் ஆண்டு தை பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் பிஸ்ட் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ:மீண்டும் வளையோசை? கமல், அமலாவை கண் முன் கொண்டு வந்த விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR