டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் மற்றும் கிம் சர்மா ஒன்றாக விடுமுறையை கழிக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாக பரவுகின்றன. அதில் கொஞ்சம் வதந்தியும் புகையாய் பரவுகிறது.
 
பவுசாடா பை தி பீச் (Pousada By The Beach), டிவிட்டர் கணக்கில் இருந்து பகிர்ந்த புகைப்படங்களில், டென்னிஸ் சாம்பியன் லியாண்டர் பயசும், நடிகை கிம் ஷர்மாவும் கோவாவில் ஒன்றாக விடுமுறையை அனுபவிப்பதை காட்டியது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாயன்று கோவாவில் ஒரு கடற்கரையில் உள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றில் நடிகை கிம் ஷர்மா, டென்னிஸ் வீரருடன் இருக்கிறார். கிம் ஷர்மா, 2010 ஆம் ஆண்டு வெளியான 'Yagam' திரைப்படத்தில் கடைசியாக நடித்தார். அவர், டென்னிஸ் வீரர் லியாண்டர் பயசுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை Pousada By The Beach பகிர்ந்து கொண்டது.



இருவரும் ஒன்றாக, நெருக்கமாக மகிழ்ச்சியுடன் கேமராக்களுக்கு ஒரு போஸ் கொடுத்து மகிழ்ந்தனர். இந்த புகைப்படங்களை பார்த்தாலே, அவர்கள் தங்கள் உறவை மறைக்க விரும்பவில்லை என்பது தெளிவாகவே தெரிகிறது.  


டென்னிஸ் சாம்பியனையும், கோவாவில் விடுமுறையை ஆனந்தமாக அனுபவிப்பதை காட்டுகிறது.  சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இரண்டு படங்களில், ஒன்றில், லியாண்டர் மீது கிம் சாய்ந்து நெருக்கமாக இருக்கிறார். இரண்டாவது புகைப்படத்தில், லியாண்டரும், கிம் ஷர்மாவும் கடற்கரை ரெஸ்டாரண்டில் அமர்ந்து உணவு உண்பதைக் காணலாம்.




மற்றொரு புகைப்படத்தில் லியாண்டர் கிம் ஷர்மாவை அரவணைத்துக் கொண்டிருக்க, தன்னை கட்டி அணைத்திருக்கும் லியாண்டரின் கையை கிம் இறுக பிடித்திருப்பதைப் பார்க்கலாம். இந்த புகைப்படத்தில் கிம் ஒரு லாப்ரடர் (Labrador) செல்ல நாய்க்குட்டியை தடவிக் கொடுத்துக் கொண்டே கேமராவைப் பார்த்து புன்னகைக்கிறார்.


Also Read | Desi Ghost Rider: ஊஞ்சலாடும் சோளக்கொல்லை பொம்மை, பீதியில் நெட்டிசன்கள்


இருவரும் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் விதத்தைப் பார்த்தால், இருவரும் கோவாவில் விடுமுறை நாட்களை ஆனந்தமாய் அனுபவிப்பது தெரிகிறது.  


இந்த புகைப்படங்கள் கிம் மற்றும் லியாண்டர் டேட்டிங் செய்கின்றார்கள் என்ற அர்த்தத்தைக் கொடுத்தாலும், இந்த ஜோடி இது தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலையும் வெளியிடவில்லை. இருப்பினும், மும்பையில் நெருக்கடியான நகர வாழ்க்கையில் இருந்து இருவரும் விலகி, தங்கள் வாழ்க்கையை உல்லாசமாக அனுபவித்து வருவதை புகைப்படங்கள் காட்டுகின்றன.


கிம் 2019 ஆம் ஆண்டில் 'ஹசீன் தில்ருபா' திரைப்பட நடிகர் ஹர்ஷ்வர்தன் ரானேவுடன் டேட்டிங் செய்வதாக கூறப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் லியாண்டர் தனது கூட்டாளியான ரியா பிள்ளை (Rhea Pillai) இடம் இருந்து பிரிந்தார்.


Also Read | கடலில் விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய துணிச்சலான நபர்; குவியும் பாராட்டு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR