சமையல் செய்வதைக் கற்றுக் கொடுக்க இன்று சமூக ஊடகங்கள் அம்மாக்களின் இடத்தைப் பிடித்துவிட்டன. ஆனால், அம்மா சொல்லிக் கொடுப்பது போல வருமா என்ற கேள்விகளுக்கு முன்னால், எப்படியெல்லாம் உணவு சமைக்கக்கூடாது என்பதை சொல்லும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் டிரெண்டிங் ஆகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கைப்பேசிக்குள் நமது உலகம் வந்த பிறகு, பொழுதுபோக்கு முதல், பொழுதே இல்லாமல் போவது வரை அனைத்தையும் சமூக ஊடகங்கள் பார்த்துக் கொள்கின்றன. சில சமயங்களில் மகிழ்ச்சி என்றால், பல சமயங்களில் தொல்லை என்று கைப்பேசிக்கு பாராட்டும், திட்டும் மாறி மாறிக் கிடைக்கிறது.


நேரம் போறவில்லை என்றால், சீச்சீ இந்த பழம் புளிக்கும் என்று சொல்வதைப் போல மொபைல் வைத்திருக்கக்கூடாது என்பதற்கான காரணத்தை அடுக்கினால், பொழுது போகவில்லை என்றால், சமையல் குறிப்பு முதல் சீரியல் வரை அனைத்தையுமே பார்த்து, கைப்பேசிக்குள் கண்ணை புதைத்துக் கொண்டு விடுகிறோம்.


மேலும் படிக்க | காதலுக்காக என்ன செய்யலாம்? 2000 கோடி ரூபாயை வேண்டாம் என்று சொன்ன காதலி!


அப்படித் தான், ஒருவர் இன்ஸ்டாகிராமில் சமையல் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தபோது சிக்கிய பிரெட் மேக்கிங் வீடியோ அவருக்கு சுகாதார சீர்கேட்டை புரிய வைத்திருக்கிறது.


கான்பூரில் ரெட்டி தயாரிக்கும் பேக்கரி ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ இது. மாவு கலப்பது முதல் பிரெட் பேக்கிங் செய்வது வரையிலான இந்த வீடியோ முழுவதும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பதை காட்டுகிறது. இந்த வீடியோ எழுப்பும் கேள்விகளே, காணொளி வைரலாவதற்கும், நமது கவனத்தைப் பெறுவதற்கும் காரணமாகிறது.


வைரல் வீடியோ பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?



இந்த வீடியோவில் ரொட்டி தயார்ப்பதைப் பார்த்த நெட்டிசன்கள் பலர் தங்களது கருத்துகளை கமெண்டுகள் மூலம் பதிவிட்டு வருகின்றனர்.


மேலும் படிக்க | ஓரியோவில் பஜ்ஜியா..கடைக்காரரின் செயலால் கடுப்பான நெட்டிசன்கள்-வைரல் வீடியோ!


அதில் ஒருவர், “இந்த ரொட்டியைத் தான் இத்தனை நாள் வாங்கி சாப்பிட்டேனா? இனிமேல் பிரேக்ஃபாஸ்டில் நோ பிரட்” என்று கூறியுள்ளார். இன்னொருவர், “வெளியில் தயாரிக்கும் பொருட்கள் வாங்காதே அப்படின்னு, எங்க பாட்டி சொன்னது சரிதான் போல!” என்று கூறியுள்ளார். 


(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இணையதளத்தில் பதிவிட்ட பதிவுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது... ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | வயதான காலத்தில் இந்த தாத்தா செய்யும் செயலை பாருங்க..வைரல் வீடியா!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ