103 வயதில் 3வது திருமணம் செய்த முதியவர்! மணப்பெண்ணின் வயது என்ன தெரியுமா?

Bhopal Old Man Marriage: போபால் நகரை சேர்ந்த 103 வயது முதியவர், இந்த வயதில் 3வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த செய்தி, தற்போது வைரலாகி வருகிறது. 

Written by - Yuvashree | Last Updated : Jan 30, 2024, 02:11 PM IST
  • 103 வயதி 3வது திருமணம்
  • மணப்பெண்ணின் வயது என்ன?
  • இணையத்தில் வைரலாகும் செய்தி!
103 வயதில் 3வது திருமணம் செய்த முதியவர்! மணப்பெண்ணின் வயது என்ன தெரியுமா?  title=

‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்று இருந்து இந்திய மக்களின் மனநிலை, கடந்த சில ஆண்டுகளில் பன்மடங்கு மாற்றங்களை பார்த்துள்ளது. ஒருவருடன் தனது வாழ்க்கை செட் ஆகவில்லை என்றால் அவரை விவாகரத்து செய்து விட்டு, தனக்கு ஏற்றவரை தேடிக்கொள்வதும் சகஜமாகி விட்டது. காதலுக்கு கண்ணில்லை என்பது போல, திருமணத்திற்கும் வயது ஒரு தடையில்லை என்பது நிதர்சனமாக பார்க்கப்படுகிறது. இதை நிரூபிக்கும் வகையில், ஒரு முதியவர் தனது 103வது வயதில் 3வது திருமணத்தை செய்துள்ளார். 

போபாலை சேர்ந்த முதியவர்…

மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் பகுதியின் இத்வாரா என்ற பகுதியை சேர்ந்தவர், ஹபிப் நாசர். சுதந்திர போராட்ட வீரரான இவர், முதலில் மகாராஷ்டிரா, நாசிக் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணமாகி சில ஆண்டுகளில் அவரது மனைவி உயிரிழந்ததை தொடர்ந்து, உத்தரபிரதேசம், லக்னோவை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவரும் உயிரிழந்துள்ளார். 

வாட்டிய தனிமை..3வது திருமணம்..

தனது இரண்டு மனைவிகளும் உயிரிழந்து விட்ட நிலையில், ஹபிப் நாசர் தனிமையில் வாடியுள்ளார். தன்னை கவனித்து கொள்வதற்கும், தனக்கு துணையாக இருப்பதற்கும் யாருமே இல்லை என்று யோசித்த ஹபிப், 3வது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதன் விளைவாக, இவர் ஃபிரோஸ் ஜகான் என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த பெண்ணிற்கு 49 வயதாகிறது. ஃபிரோஸிற்கும் ஹபிபிற்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைப்பெற்றுள்ளது. இதையடுத்து இவர்களின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

வைரல் வீடியோ:

தற்போது, இந்த 103 வயது முதியவர் செய்து கொண்ட திருமணம் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அவர் தனது புது மனைவியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு செல்வதும் பலர், அந்த முதியவருக்கும் அவரது மனைவிக்கும் வாழ்த்து தெரிவிப்பதுமாக இருந்தனர். அந்த வாழ்த்துகளை, அவரும் சிரிப்புடன் ஏற்றுக்கொள்ளும் காட்சிகளும் அந்த வீடியோவில் வைரலாகி வருகிறது. 

Bhopal Man

மேலும் படிக்க | திருமண நாளன்று மணப்பெண் செய்த காரியம்! அதிர்ந்து போன நெட்டிசன்கள்!

‘இது என்னுடைய முடிவு..’

தன் திருமணம் குறித்து, முதியவரை திருமணம் செய்து கொண்ட ஃபிரோஸ் ஜஹான் பேசியுள்ளார். அப்போது இது தனது சொந்த முடிவு என்று, இவரை திருமணம் செய்து கொள்ளுமாறு யாரும் தன்னை வற்புறுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தனது கணவருக்கு உடலில் எந்த மருத்துவ பிரச்சனைகளும் இல்லை என்றும், அவர் நலமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

‘தனிமையில் இருந்தேன்..’

மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ள ஹபிப்பும் இது குறித்து பேசியுள்ளார். அதில், எனது மனைவிகள் 2 பேரும் இறந்த பிறகு தான் வேறு ஒரு உலகத்திற்கு சென்று விட்டதாகவும் பின்பு தான் தனியாக இருப்பதை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால்தான் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | மாணவியின் முடியை பிடித்து தரதரவென இழுத்துச் செல்லும் பெண் போலீசார்! அதிர்ச்சி வீடியோ வைரல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News