பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து தெரியப்படுத்தினாலேயே அச்சுறுத்தல் வருகிறது என எழுத்தாளர் லீனை மணிமேகலை தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக பிரபல திரைப்பட இயக்குநர் சுசி கணேசன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக பெண் எழுத்தாளர் லீனா மணிமேகலை பரபரப்பு புகார் அளித்தார். இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்து சுசி கணேசன் தனது முகப்புத்தகத்தின் வாயிலாக விளக்கம் அளித்தார்.


இதனையடுத்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த லீனை மணிமேகலை தெரிவிக்கையில்...


"#MeToo இயக்கத்தின் மூலம் உலகளவில் உள்ள பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியை குறித்து பேசி வருகின்றனர். 


பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து தெரியப்படுத்தினாலேயே அவர்களுக்கு அச்சுறுத்தல் வருகிறது. சில நேரங்களில் ஆதாரம் இருந்தும் சட்ட ரீதியாக பெண்களால் குற்றத்தை நிறுபிக்க முடிவதில்லை.


இரண்டு வருடங்களுக்கு முன்பு எனக்கும் இயக்குயர் சுசி கணேசனால் பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டது. செயற்பாட்டாளராக பயணிக்கும் நேரத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சுசி கணேசனானல் மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியே வந்து தெரிவிக்க வேண்டும்.


ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் இல்லை, அதேப்போல் அனைவரும் நல்லவர்கள் இல்லை. பணியிடத்தில் பெண்கள் சமமாக மதிக்கப்பட வேண்டும். பெண்கள் பாதுகாப்புக்கு விசாகா கமிட்டி பணியிடங்களில் அவசியம். 


முக்கியமான நடிகர்களான ரஜினி, கமல் போன்றவர்கள் இந்த நேரத்தில் மெளனம் காப்பது குற்றம் செய்தவர்களுக்கு ஆதரவாக இருப்பதாக அமைகிறது" என குறிப்பிட்டுள்ளார்!