பயந்த சுபாவமா நீங்கள்? இந்த வீடியோவை பார்க்காதீர்கள்: ஷாக் கொடுக்கும் வைரல் வீடியோ
Leopard Attack Viral Video: இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் ஆடிப்போயுள்ளனர். சிறுத்தையால் தாக்கப்பட்டவர்களை நினைத்து அனைவரும் கவலையின் உச்சியில் உள்ளனர்.
வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தற்போது திகிலூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தின் மல்லி மறையில் மக்கள் பீதியில் உள்ளனர். ஒரு பயங்கரமான சிறுத்தை இங்கு சுதந்திரமாக சுற்றித் திரிகிறது. இது தினமும் மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. திங்கட்கிழமையும் இதேபோன்ற ஒரு காட்சி காணப்பட்டது. அல்மோரா மாவட்டத்தின் துவாரஹத் பகுதியில் உள்ள பௌரா கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை சிறுத்தை குறி வைத்தது.
காயமடைந்த மூவரில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இருவர் சீராக இருப்பதாகவும் எமது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | நொடியில் நகையை அபேஸ் செய்த ஆண்டி: கூலா ஒரு கொள்ளை, வைரல் வீடியோ
திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் பச்சுலி தேவி, சுமித் குமார் மற்றும் புஷ்பா தேவி ஆகியோர் மல்லி மறை பகுதி வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென சிறுத்தை பின்னால் இருந்து வந்தது. வேகமாக ஓடிய அந்த சிறுத்தை முதலில் புச்லி தேவியைத் தாக்கியது. புஷ்பாவும் சுமித்தும் புச்லியை காப்பாற்ற முயன்றபோது அவர்களையும் அது தாக்கியது. மறுபுறம், இந்த சம்பவத்தை மலையிலிருந்து நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் தனது மொபைலில் படம்பிடித்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திகிலூட்டும் அந்த தாக்குதல் வீடியோவை இங்கே காணலாம்:
தற்போது, காயமடைந்த மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பச்சுலி தேவியின் நிலையைக் கண்டு, அவர் ஹல்த்வானி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். மறுபுறம், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 15,000 ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.
சிறுத்தைப்புலியின் தாக்குதல் மலைப்பகுதிகளில் நடப்பது இது முதல்முறையல்ல. இதுபோன்ற சம்பவங்கள் தினமும் நடக்கின்றன ஆனால் தடுக்க எடுக்கப்பட்ட எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகின்றது. இணையவாசிகள் தற்போது இதை பார்த்து மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
மேலும் படிக்க | இஞ்சி தின்ற குரங்கை பார்த்திருக்கிறீர்களா? இந்த வைரல் வீடியோல பாருங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ