இஞ்சி தின்ற குரங்கை பார்த்திருக்கிறீர்களா? இந்த வைரல் வீடியோல பாருங்க

Monkey Video: இங்கு ஒருவர் குரங்கிற்கு இஞ்சிய கொடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 28, 2022, 01:09 PM IST
  • இஞ்சி தின்ன குரங்கு.
  • குரங்கிற்கு இஞ்சிய கொடுத்த நபர்.
  • வைரலாகும் வீடியோ.
இஞ்சி தின்ற குரங்கை பார்த்திருக்கிறீர்களா? இந்த வைரல் வீடியோல பாருங்க title=

சமூக வலைதளங்களில் பல வீடியோக்கள் வைரலாகி வருவததை நாம் பார்க்க முடியும். தற்போது டிரெண்டிங்கிற்கு ஏற்றவாறு இருக்கும் வீடியோக்களை இளசுகள் முதல் பெரியவர்கள் வரை யாரும் மிஸ் செய்யமாட்டார்கள். பொதுவாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் எப்போதுமே டிரெண்டிலேயே இருக்கும். சில வீடியோக்கள் மனதை காயப்படுத்துவது போல் இருக்கும், சில விளையாட்டு தனமாக இருக்கும், மற்றவை குறும்புதனமாக இருக்கும். 

அந்தவகையில் தற்போது இங்கு வைரலாகி வரும் வீடியோ குரங்கை தொடர்புடையது. பொதுவாக நாம் இஞ்சி தின்ன குரங்கு போல முகத்தை வைக்காதே என்கிற சொல்லை நாம் அடிக்கடி உபயோகம் படுத்துவதை பார்த்திருப்போம். ஆனால் உண்மையில் குரங்கு இஞ்சி சாப்பிவதை நீங்கள் கண்டிருக்க மாட்டீர்கள். அதன்படி இங்கு ஒரு நபர் உண்மையில் ஒரு குரங்குக்கு இஞ்சியை கொடுத்து டெஸ்ட் செய்துள்ளனர். அதை சாப்பிட முயற்சித்த குரங்கு என்ன செய்தது என்பதை வீடியோவில் கண்டால் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள். சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | சிறுத்தையை ஓட விட்ட குரங்கு, இது உனக்கு தேவையா: வீடியோ வைரல்

வீடியோவை இங்கே பார்க்கவும்

இந்த வீடியோவில் ஒருவர் குரங்குக்கு இஞ்சியை தருவதை நாம் காணலாம். அதை வாங்கிய குரங்கு அந்த இஞ்சியை சாப்பிட தொடங்கிய சில வினாடிலேயே அந்த இஞ்சியை தூக்கி வீசிவிட்டு வித்தியாசமான முகத்தை காட்டியது.

இந்த வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி சுஷாந்த் நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த காட்சி முழுவதும் கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடியோவை லைக் செய்துள்ளனர். இதுமட்டுமின்றி, இணையவாசிகள் இதற்கு பல வித வேடிக்கையான கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க | சூப்பராக பாத்திரம் தேய்க்கும் குரங்கு: கொஞ்சித் தீர்க்கும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News