வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலங்குகளுக்குள்ளும் பல சுவாரசியங்கள் உள்ளன. சிங்கங்கள் இரை தேடுவதில் மிக மும்முரமாக இருக்கும், அதன்படி தற்போது ஒரு சிங்கத்தின் வீடியோ இணையத்தில் வெளிவந்துள்ளது. இதில் இந்த வீடியோவில், வரிக்குதிரை சிங்கத்தின் தாடையில் இருந்து நண்பரை எவ்வாறு காப்பாற்றுகிறது என்பதை நீங்கள் பார்க்கலாம். சிங்கம் வேட்டைக்கு வரிக்குதிரையைப் பிடிப்பதைக் காணலாம். ஆனால் அதன்பின் நடந்தது முற்றிலும் வேறுப்பட்டது.


மேலும் படிக்க | சூப்பராக பாத்திரம் தேய்க்கும் குரங்கு: கொஞ்சித் தீர்க்கும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ 


நட்புக்காக வரிக்குதிரை தன் உயிரைப் பணயம் வைத்தது
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் சிங்கம் எப்படி நடந்து வந்து வரிக்குதிரையை பிடிக்கிறது என்பதை பார்க்கலாம். வரிக்குதிரையின் தோழி அதைப் பார்த்தபோது அந்த இடத்திற்கு சென்று அந்த சிங்கத்தின் முன் வந்து சண்டையிடுகிறது. இறுதியில் நண்பனைக் காப்பாற்றியது மட்டுமின்றி, சிங்கத்தையும் கொன்றுவிட்டு ஓடிவிட்டது.


வீடியோவை இங்கே பார்க்கவும்:



மனிதர்களின் நட்பின் உதாரணங்களை நீங்கள் நிறைய பார்த்திருப்பீர்கள். ஆனால் இதுபோன்ற காட்சிகள் முதன்முறையாக விலங்குகளிடையே காணப்பட்டிருக்கலாம். இந்த வீடியோ Wildlifeanimall என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


மேலும் படிக்க | 'தாத்தா இது தேவையா’: பெண்ணை பார்த்து முதியவர் செய்த செயல், ஷாக் ஆன நெட்டிசன்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ