Viral Video: காட்டு எருமையை கபளீகரம் செய்ய துடிக்கும் முதலை... மனம் பதற வைக்கும் வீடியோ!

காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகி வருகின்றன. இவற்றில் சிலவற்றைக் கண்டால் நமக்குப் பயமும், சிலவற்றைப் பார்க்கும் போது நமக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 23, 2022, 02:59 PM IST
  • சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோ.
  • காடுகளில் உள்ள வலிமையான விலங்குகள் பலம் குறைந்தவர்களைத் தாக்கி இரையாவதை பல வீடியோக்களில் பார்த்திருக்கிறோம்.
  • சில சமயங்களில் நாம் நினைத்ததற்கு மாறாக விஷயங்கள் நடக்கும் போது ஆச்சரியம் ஏற்படுவதை தடுக்க முடியாது.
Viral Video: காட்டு எருமையை கபளீகரம் செய்ய துடிக்கும் முதலை... மனம் பதற வைக்கும் வீடியோ!  title=

காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகி வருகின்றன. இவற்றில் சிலவற்றைக் கண்டால் நமக்குப் பயமும், சிலவற்றைப் பார்க்கும் போது நமக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், குளத்தில் தண்ணீர் குடிக்க வந்த காட்டு எருமையை முதலை ஒன்று தாக்க முயற்சிப்பதைக் காணலாம்.

முதலைகள் நீரிலும் நிலத்திலும் கடுமையாக தாக்கும் திறன் பெற்றவை. வாய்ப்பு கிடைத்தவுடன் எந்த மிருகத்தையும் வெற்றிகரமாக தாக்கி இரையாக்கி விடும். அதன் பிடியில் இருந்து தப்புவது மிகவும் கடினம். தற்போது வைரலாகி வரும் வீடியோவில், முதலையிடம் காட்டு எருமை ஒன்று சிக்கும் காட்சி நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது. அதில் காட்டு விலங்கின் வாலை தனது வாயால் முதலை கவ்விக் கொண்ட காட்சி மனதை பதற வைக்கும். இந்த காணொளி சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க |  Viral Video: என்னடா இது வீரனுக்கு வந்த சோதனை... சிங்கத்தை பந்தாடும் எருமைகள்!

வைரலாகும் வீடியோவைக் கீழே காணலாம்:

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by (@feline.unity)

 

தனது வாலை முதலை கவ்விக் கொண்ட போதும், காட்டு எருமை தன் தைரியத்தை விட்டுக் கொடுக்காமல் போராடுவதையும் பார்க்கலாம். ஆனால் முதலையும் எளிதில் விடவில்லை.. எப்படியாவது காட்டெருமையை தண்ணீருக்குள் இழுக்க முதலை முயல்கிறது. கடைசியில் முதலை பிடியில் சிக்கி சோர்ந்து போன மாடு உயிரைக் காப்பாற்றிக் ஓடுவதை வீடியோவில் காணலாம்.  

காடுகளில் உள்ள வலிமையான விலங்குகள் பலம் குறைந்தவர்களைத் தாக்கி இரையாவதை பல வீடியோக்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் சில சமயங்களில் நாம் நினைத்ததற்கு மாறாக விஷயங்கள் நடக்கும் போது ஆச்சரியம் ஏற்படுவதை தடுக்க முடியாது. தற்போது அப்படி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  தன்னைத் தாக்க வந்த முதலையின் பிடியில் இருந்து காட்டு எருமை துணிச்சலாக தப்பிச் செல்வதை வீடியோவில் காணலாம்.

மேலும் படிக்க | Viral Video: சிங்கத்திடம் தப்பி முதலையிடம் மாட்டிக் கொண்ட எருமை! வனத்தில் ஒரு உயிர் போராட்டம்!

மேலும் படிக்க | Viral Video: சிறுத்தையிடம் சிக்கி சின்னாபின்னமான பாம்பு... மனம் பதற வைக்கும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News