வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


சிங்கங்களுக்கு வலிமையுடன், புத்திசாலித்தனமும் அதிகம். இவை கண்ணிமைக்கும் நேரத்தில் இரையைப் பிடித்து விடுகின்றன. சிங்கங்கள் புத்திசாலித்தனமாக இரையை வேட்டையாடும் விதத்தை நாம் பலமுறை பார்த்துள்ளோம். 


எனினும், இவ்வளவு திறமை வாய்ந்த குணங்களுக்கு மத்தியில், சிங்கத்தின் மிகப்பெரிய குறைபாடு என்னவென்றால், அதனால் மரத்தில் ஏற முடியாது. அப்படியே சிங்கம் மரம் மீது ஏறிவிட்டாலும், அதனால் மரத்திலிருந்து இறங்க முடியாது. 


மேலும் படிக்க | தாக்க வந்த புறாவுக்கு கிஸ் கொடுத்த பூனை: இணையவாசிகளை அழ வைத்த வைரல் வீடியோ 


இது தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. எப்படியோ கஷ்டப்பட்டு மரத்தில் ஏறிய பல சிங்கங்களை வீடியோவில் காண முடிகின்றது. ஆனால் இறங்குவதற்கு இந்த சிங்கங்கள் படும் பாடு வேடிக்கையாக உள்ளது. 


பல சிங்கங்கள் மரத்தில் சிக்கிக்கொண்டன
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் பல சிங்கங்கள் காட்டில் உள்ள அடர்ந்த மரத்தில் ஏறி ஓய்வெடுப்பதை காண முடிகிறது. சிறிது நேரம் கழித்து சிங்கங்களில் ஒன்று கீழே இறங்க விரும்புகிறது. ஆனால் அதனால் கீழே இறங்க முடியவில்லை.


எப்படியோ முயற்சித்து அந்த சிங்கம் ஒரு மரக்கிளையை பிடித்துக்கொண்டு கீழே இறங்க முயல்கிறது. அந்த முயற்சியில் அது கீழே விழுந்துவிடுகிறது. கீழே விழுந்த சிங்கத்துக்கு வெட்கமாக இருக்கிறது. தான் விழுந்ததை யாராவது பார்த்தார்களா என்பதை தெரிந்துகொள்ள அது தலையை தூக்கி தனது நண்பர்களை பார்க்கிறது. விழுந்த வியப்பை விலக்கிக்கொள்ள சிங்கம் நன்றாக தலையை ஆட்டுகிறது.


எது எப்படியோ, இந்த வீடியோ மூலம் சிங்கத்தால் மரம் ஏற முடியாது என எண்ணும் நபர்களுக்கு சந்தேகம் பிறந்துள்ளது. ஏனெனில், வீடியோவில், பல சிங்கங்கள் மரத்தில் அமர்ந்திருப்பதை நன்றாக காண முடிகின்றது. 


பல்பு வாங்கிய சிங்கத்தின் வீடியோவை இங்கே காணலாம்: 



காடுகளில் பதிவான வீடியோ வைரலானது
சிங்கங்களின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ feline.unity என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சிங்கங்கள் மரத்தில் ஏறுவது இது முதல் முறையல்ல, இதற்கு முன்பும் பலமுறை அவை மரத்தில் ஓய்வெடுப்பதை பல வீடியோக்கலில் நாம் கண்டுள்ளோம். இருப்பினும், தரையில் இருப்பது போன்ற சுறுசுறுப்பை சிங்கங்களால் மரத்தில் காட்ட முடியாது. 


மேலும் படிக்க | பதுங்குக்குழியில் பதுங்கினாலும் பாய்ந்து வேட்டையாடும் சிறுத்தையின் பாதள வேட்டை 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR