இந்த புத்துக்கு யாரும் பால் ஊத்த மாட்டீங்களா: கொட்டாவி விட்டு காத்திருக்கும் பாம்பு

புற்றுக்குள் இருந்தே இரை தேடும் அழகான பாம்பின் கொட்டாவி விடும் வீடியோ வைரல்

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 27, 2022, 03:43 PM IST
  • புற்றுக்குள் இருந்தே இரை தேடும் பாம்பு
  • கொட்டாவி விடும் அழகான பாம்பு
  • அழகான பாம்பின் இரை தேடும் க்யூட் வீடியோ
இந்த புத்துக்கு யாரும் பால் ஊத்த மாட்டீங்களா: கொட்டாவி விட்டு காத்திருக்கும் பாம்பு title=

வைரல் வீடியோ: பாம்பின் பெயரைக் கேட்டாலே பயமாக இருக்கும் என்பது  ஒரு காலம். இன்றைய நவீன ழில்நுட்ப வசதிகளால் பாம்பின் ஒவ்வொரு கணத்தையும் பார்ப்பதால், அவற்றின் அழகான ஸ்டைலான செயல்பாடுகளையும் ரசிக்க முடிகிரது.

கேண்டிட் கேமரா, மறைத்து வைக்கப்பட்டு எடுக்கப்படும் கேமராக்கள், ட்ரோன் கேமராக்கள் என பலவிதமான நவீன வழிகளால் விலங்குகளின் சிறு சிறு செயல்களையும் ரசிக்க முடிகிறது.

அப்படி ரசித்த ஒரு விஷயத்தை உடனடியாக சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்து, அதை பலரும் ரசித்து, அவை வைரலாகின்றன.  

அதிலும் நாம் நேரில் பார்க்காத, பார்க்கவே முடியாத இந்த பாம்பின் கொட்டாவி வீடியோ வைரலாகிறது. இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள் அனைத்துமே வித்தியாசமானதாக இல்லாவிட்டாலும், இந்த வீடியோவை பார்த்தால் அனைவரும் சூப்பர் என்று சொல்லாமல் இருக்க முடியாது. 

மேலும் படிக்க | கடலில் கலர்ஃபுல்லாக நீந்தி விளையாடும் பாம்பு: இது பாம்பா இல்லை பழுதா

அழகான பாம்பு, கொட்டாவி விட்டாலும் அழகாகவே இருக்கிறது. நாம் வீடியோவில் பார்ப்பதால் அதன் அழகை ரசிக்கிறோம்.

ஆனால், பாவம் அந்த பாம்பு இரையைத் தேட செல்ல விரும்பினாலும், அது சோம்பலாக இருக்கிறது போலும்! வாயைத் திறப்பது  இரை கிடைத்ததால் அல்ல. கொட்டாவி விடுவதற்காக என்று தெரியும்போது சிரிப்பு வருகிறது.

மஞ்சளும், வெண்மையும் கலந்த வித்தியாசமான நிறத்தில் இருக்கும் இந்த பாம்பின் கொட்டாவியும் வித்தியாசமாகவே இருக்கிறது.

மேலும் படிக்க | கட்டிப்புடி வைத்தியம் செய்யும் காதல் பாம்புகள்: வைரலாகும் பாம்புகளின் ரொமான்ஸ்

சோம்பேறித்தனமாக இல்லாமல் இந்த பாம்பு வெளியே வந்தால், அது எவ்வளவு பெரியதாக இருக்கிறது என்பது தெரிந்திருக்கும். ஆனால், தனது தலையை மட்டுமே வெளியே நீட்டி பார்க்கிறது.

தலையை நீட்டி, வெளியில் இருந்து இரை ஏதாவது கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறது. ஆனால், எதுவும் கிடைக்கவில்லை என்பதால் அது கொட்டாவி விடுகிறது.

இந்த அழகான பாம்பு இருக்கும் புற்றும் வித்தியாசமானதாக அழகானதாக இருக்கிறது. பாம்பின் வாய் திறக்கும்போது, புற்றின் வாயைப் போலவே பெரிதாகவே இருக்கிறது. 

மேலும் படிக்க | கடலில் கலர்ஃபுல்லாக நீந்தி விளையாடும் பாம்பு: இது பாம்பா இல்லை பழுதா

இணையத்தில் வெளியாகும் பாம்புகளின வீடியோக்கள் பலரால் பகிரப்பட்டு வைரலாகின்றன. அவற்றுள் சில வைரலான வீடியோக்கள் இவை.... பாம்பை பார்த்து ரசித்து பரவசமாவது வீடியோக்கள் மூலமாகத் தான்....

மேலும் படிக்க | இது பாம்புகளின் மரம் பிடிக்கும் சண்டை: வைரலாகும் ஆதிக்கப் போர்

மேலும் படிக்க | சமையல்காரரின் கைவண்ணத்தில் வைரலாகும் பாம்பு வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News