வேட்டைகள் பலவிதம். அதில் சிலவிதம் பார்த்தாலே திகிலையும், திகைப்பையும் வியப்பையும் கொடுப்பவை. சிறுத்தையின் இரை வேட்டை கடுமையான தாக்குதல் வேட்டையாக இருக்கும்.
தாக்குதல் என்பது திடீரென நடப்பது தானே? அதிலும் காட்டில் இருக்கும் விலங்குகளின் இரைக்கான வேட்டையானது திரில்லிங்கானது.
அண்மைக்காலமாக இணையதளங்களில் விலங்குகளின் வீடியோ வைரலாகிவருகிரது. அது, விலங்குகளின் சாமார்த்தியமாக இருந்தாலும் சரி, வேட்டையாடும் திறமையாக இருந்தாலும் சரி, கர்ஜிக்கும் விலங்கின் ஒலி வீடியோவாக இருந்தாலும் சரி.
திடீர் தாக்குதல்களை எதேச்சையாக வீடியோ பதிவு செய்தவர்கள், அதை சமூக ஊடகங்களில் பதிவிடுகின்றனர். அவை, வைரலாகி பலரின் விருப்பத்திற்குரிய வீடியோவாக மாறிவிடுகிறது.
மேலும் படிக்க | பாய்ந்து துரத்தும் சிறுத்தை: பதறியோடும் விடாது துரத்தும் சிறுத்தை
இணையதளங்களில் வெளியாகும் வீடியோக்களில் சில பலராலும் ரசிக்கப்படாவிட்டாலும், அவை எழுப்பும் அச்சமும் திகைப்புமே அவற்றை வைரலாக்கிவிடுகின்றன.
அதிலும் விலங்குகளின் வீடியோக்களும், வேட்டையாடும் விலங்கு வீடியோக்களும் அதிக அளவில் வைரலாகின்றன. அதில் அண்மையில் வைரலாகும் சிறுத்தையின் வீடியோ பலரால் பார்க்கப்பட்டு பகிரப்பட்டுள்ளது.
சிறுத்தைக்கு பயந்து பதுங்கியிருக்கும் விலங்கை, வாசனையால் உணர்ந்துவிட்ட சிறுத்தை அங்கேயே சுற்றித் திரிகிறது. அதன்பிறகு, பதுங்குக் குழியில் பதுங்கியிருக்கும் விலங்கை எப்படி வேட்டையாடுகிறது என்று இந்த 12 விநாடி வீடியோவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க | கர்ஜனையால் காட்டை உலுக்கும் சிங்கம்
வைரலாகும் இந்த வீடியோ, சிறுத்தையின் விடா முயற்சியையும், குழிக்குள் பதுங்கியிருக்கும் விலங்கை வெளியே இழுத்து தாக்கும் தன்மையையும் காட்டுகிறது. திகைப்பைத் தரும் இந்த வீடியோள் கூகுளில் டிரெண்டிங் ஆகிறது.
சில நொடிகள் மட்டுமே செல்லும் வீடியோவாக இருந்தாலும், அதிர்ச்சியையும் வியப்பையும் ஒரே சமயத்தில் ஏற்படுத்துகிறது.
அதிர்ச்சிக்கு காரணம் திடீர் தாக்குதல் என்றால் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பதுங்கினாலும், வல்லவனின் பலத்திற்கு முன்னால் ஒன்றும் செய்ய முடியாமல் இரையாகும் பரிதாபத்தையும் உணர்த்தும் வீடியோ இது.
மேலும் படிக்க | 'ப்பா...' என வாய் பிளக்க வைக்கும் டான்ஸ்: இணையத்தை கலக்கும் பெண்ணின் வைரல் வீடியோ
துணிந்து எதிர்தாக்குதல் நடத்தக் கூட முடியாமல், சீறி பாய்ந்து வரும் சிறுத்தையிடம் இருந்து ஒளிந்துக் கொள்ள நல்ல இடத்தை தேர்ந்தெடுக்கவில்லை என்று அந்த விலங்கு உணர்ந்திருக்கும் தருணமாக இருந்திருக்கும்.
ஆனால், வேட்டையாடப்படும் விலங்குகளும், இரையாகும் விலங்குகளும் நிறைந்த வனப் பகுதியில் இந்த சாமர்த்தியம் எந்த அளவுக்கு பயன்படும். உண்பதும், உயிரை பாதுகாப்பதுமே வாழ்க்கையாக இருக்கும் காட்டு வாழ்க்கையில் வேட்டையும், இரையாவதும் தவிர்க்க முடியாதவை.
மேலும் படிக்க | Viral Video: அட இது நான் தானா... குரங்கு குட்டியின் க்யூட் ரியாக்ஷன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe