சிங்கங்களின் காதலும் மோதலும்: மனிதனோ மிருகமோ, காதல் என்றால் மோதலும், அதன் கூடவே சேர்ந்து வருகிறது. ஆனால், மனிதக் காதலைப் பார்த்து பழக்கப்பட்டட் நமக்கு இன்று சமூக ஊடகங்களே மிருகக் காதலைக் கற்றுக் கொடுக்கின்றன. மிருகங்களின் காதலையும் பார்த்து ரசிக்க வைக்கின்றன. அவற்றின் காதலை மட்டுமல்ல, மோதலையும் பார்த்து ரசிக்க வீடியோக்கள் உதவுகின்றன. நம்முடைய தினசரி வாழ்க்கையின் அங்கமாகிவிட்ட சமூக ஊடகங்கள் இல்லாவிட்டால், இன்று விலங்குகளின் பல்வேறு நுணுக்கமான அசைவுகளையும், ஒவ்வொரு நடவடிக்கையையும் நாம் பார்த்து ரசிக்க் முடியாது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனி உலகமாக இயங்கி வரும் இணைய உலகில், பல வினோதமான விஷயங்களை தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன், சில பின்விளைவுகளையும் ஏற்படுத்தினால், பொழுது போவதே தெரியாமல் செய்யும் மாயத்தையும் சமூக ஊடகங்கள் செய்கின்றன. 


மேலும் படிக்க | பயந்த சுபாவமா இருந்தா பாக்காதீங்க: முதலை வாயில் கை.. தப்பித்ததா? துண்டானதா?


சமூக ஊடகங்களில் வெளியாகும் வித்தியாசமான வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் மிருகங்களின் வித்தியாசமான வீடியோக்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. 


சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் வீடியோவில், சிங்கங்களின் வீடியோ அனைவருக்கும் ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது. கூட்டமாக இருக்கும் சிங்கத்தின் இடையில், புகுந்து அடாவடி செய்யும் ஆண் சிங்கத்தின் அதிரடி தாக்குதல் வீடியோவைப் பார்த்தால் முதலில் அதிர்ச்சி ஏற்பட்டாலும், சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கின்றன.


மேலும் படிக்க | Animal Video: ஜாகுவாரின் வேட்டையைப் பார்த்து அதிர்ந்து போய் நிற்பது யார் தெரியுமா?


காட்டிற்கு ராஜா என்று அழைக்கப்படும் சிங்கம், சக்தி வாய்ந்தது என்பது, அவற்றின் நடையிலேயே தெரியும் என்றாலும், பிடரி மயிர் சிலிர்க்க, சீறிப் பாயும் சிங்கங்களின் சண்டை எதற்காக?


எல்லாம் காதலுக்காக என்பது விலங்குகளின் வாழ்க்கையைப் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். பெண்ணுக்காக அடித்துக் கொல்லும் சிங்கத்தின் இந்த வீடியோவைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது



வனவிலங்குகளுக்கு இடையே சண்டை எழுவது சகஜம். அதுவும், ஆக்ரோஷமாக மோதிக் கொள்ளும் விலங்குகளின் வீடியோக்களுக்கு மத்தியில், எதிர்பாராமல் தாக்கி வெற்றி பெறும் விலங்குகளின் தீரமும் ஆச்சரியப்பட வைக்கிறது.  


மூர்க்கமான இந்த சண்டையை பார்த்தவர்கள் அதை வீடியோவாகவும் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை லட்சக்கணக்கானவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். ஆனால் எப்போது? எங்கு எடுத்தது என்ற விவரம் தெரியவில்லை. இருந்தாலும், காதலுக்காக இந்த அளவு சண்டை அவசியமா காட்டு ராஜா என்ற கேள்வியும் எழுகிறது தானே?


மேலும் படிக்க | Wild Buffalo Hunt: காட்டுப்பூனையை தூக்கி பந்தாடிய காட்டெருமை வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ