யானையிடம் கேவலமாக பல்பு வாங்கிய சிங்கம்: வீடியோ வைரல்

யானை ஒன்றை சிங்கம் தாறுமாறாக தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது, அதன்பின் நடந்ததை பார்த்தால் உங்களால் நம்பவே முடியாது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 29, 2022, 12:56 PM IST
  • யானையை சீண்டிய சிங்கம்.
  • கண்ணீர் விடும் யானை.
  • யானைகள் காட்டின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த விலங்குகளாக கருதப்படுகின்றன.
யானையிடம் கேவலமாக பல்பு வாங்கிய சிங்கம்: வீடியோ வைரல் title=

இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 

யானைகள் காட்டின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த விலங்குகளாக கருதப்படுகின்றன. அதன்படி வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி சலசலப்பை உருவாக்குகின்றன. விலங்குகளில் குரங்கு, யானை, பாம்பு, நாய் என இவற்றின் வீடியோவுக்கு தனி மவுசு உள்ளது. இந்த வீடியோக்கள் மூலம் யானைகள் செய்யும் பல வேடிக்கையான மற்றும் அழகான செயல்களை நாம் கண்டுள்ளோம். அதன்படி இங்கு ஒரு யானையின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் யானையை எப்படியாவது வேட்டையாட முயற்சிக்கும் சிங்கத்தை நாம் வீடியோவில் நாம் காணலாம்.

மேலும் படிக்க | குசும்பு பிடித்த குரங்கின் குறும்பு, அடி வாங்கிய அப்பாவி முதியவர்: செம வைரலாகும் வீடியோ

கேமராவில் பதிவான இந்த தாக்குதலில், யானை மீது சிங்கம் ஆதிக்கம் செலுத்துவதைக் காணலாம். முதலில் அந்த சிங்கம் யானையின் காதை கடிப்பதை காணலாம். பிறகு சிங்கம் யானையின் மேல் ஏறி யானையை தாக்குவதும் காணப்பட்டது. யானை தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டே இருக்கிறது. இறுதியாக வென்ற அந்த யானை சிங்கத்தை வெறித்தனமாக ஓட விடுவதை நாம் காணலாம்.

வீடியோவை இங்கே காணுங்கள்: 

 யானை மற்றும் சிங்கம் சண்டை தொடர்பான இந்த வீடியோ Life and nature என்ற டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இணையவாசிகள் இதற்கு பல்வேறு கமெண்டுகளை அளித்து வருகிறார்கள், மேலும் இதுவரை இந்த வீடியோ 8 லட்சம் பார்வையாளர்களையும் 7 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது. 

மேலும் படிக்க | Viral Video: மனிதனை பந்தாடிய சுறாக்கள்! திகிலூட்டும் வைரல் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News