Little Girl Singing Sarakku Vechirukken Song Viral Video : மழலை பேச்சும், சிரிப்பும் எப்போதும் அழகு. பாடினால், பேரழகு. அப்படி ஒரு குழந்தை விஜய் படத்தின் பாடலை பாடியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாடும் குழந்தைகள்:


குழந்தைகள் பொதுவாகவே, தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களை அப்படியே உள்வாங்கி அதை செய்து காட்டுவர். இது, நற்பழக்கங்களுக்கும் பொருந்தும், தீய பழக்கங்களுக்கும் பொருந்தும். “எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே..” என்ற பாடலே இருக்கிறது அல்லவா? குழந்தைகளுக்கு எதை கண்டாலும் ஆனந்தம்தான். காரணமே இல்லாமல் ஏதேனும் நடந்தால் கூட, அவை வியப்புடன் பார்க்கும், ஒன்றுமே இல்லாத விஷயங்களுக்கு கொக்கரக்கொட்டி சிரிக்கும். ஆனால், தும்மல்-இருமல் போன்ற சிறு சத்தங்கள் கூட அவைகளுக்கு அழுகை வரவழைத்து விடும். அப்படிப்பட மென்மையான குழந்தைகள், கொஞ்சம் நினைவு தெரிய ஆரம்பித்தவுடன் பாட ஆரம்பித்து விடுவர். பாடல் என்றால் “சரிகமபதனி..” என்ற ராகமான பாடல்கள் அல்ல. பிறர் பேசும் போது அவர்களின் வாயை பார்த்து அவை “ஆ..ஆ..” என்று பாடும் பாடல்தான். இப்படித்தான் அவை பேசவும் தொடங்குகின்றன. அப்படி ஒரு குழந்தை தற்போது விஜய் பட பாடலை பாடி வைரலாகி இருக்கிறது.


மேலும் படிக்க | புல்லெட்டில் மாஸ் எண்ட்ரி: இணையத்தை பற்றவைத்த மணமக்களின் வைரல் வீடியோ


வைரல் வீடியோ:


விஜய் நடிப்பில் 2001ஆம் ஆண்டு வெளியான ஷாஜகான் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்தான் அது. மணி ஷர்மாவின் இசையில் உருவான அப்படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட். இப்படத்தை எப்போது பார்த்தாலும் புதிது போல உணர வைப்பதற்கு இந்த பாடல்களும் ஒரு காரணம். இதில் இடம்பெற்றிருக்கும் “மெல்லினமே மெல்லினமே” பாடல் ஒன் சைட் லவ்வர்ஸ்களுக்கும், “சரக்கு வெச்சிருக்கே இறக்கி வெச்சிருக்கேன்..” பாடல் சிங்கிள்ஸ்களின் கொண்டாட்ட பாடலாகவும் இருக்கிறது. இந்த பாடலை பாடிய ஒரு குழந்தைதான் தற்போது வைரலாகி வருகிறது.