அந்த பொண்ணு, அந்த பூ, அந்த பூனைகள்.... அட, அட, அட.. என்ன ஒரு காம்பினேஷன்: வைரல் வீடியோ
Cute Viral Video: இந்த பெண்ணுக்கு பூனைகள் மீது இப்படி ஒரு பாசமா என நம்மை வியக்க வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருக்கின்றது.
வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
குழந்தைகள் தூய்மையான உள்ளம் கொண்டவர்கள். அவர்களுக்கு இனம், நிறம் அல்லது எந்த சமூகப் பொருளாதார நிலையும் பாராமல் அனைவரும் நண்பர்களே. அவர்கள் தங்கள் உடன்பிறப்புகள் மற்றும் சிறந்த நண்பர்களைப் போல அவர்கள் விரும்பும் தங்கள் செல்லப்பிராணிகளுடன் ஒரு சிறப்புப் பிணைப்பை ஏற்படுத்துகிறார்கள். குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு இடையிலான பிணைப்பின் வீடியோக்கள் சமூக ஊடகங்களிலும் பல பகிரப்பட்டுள்ளனன.
தற்போதும் மிக அழகான ஒரு வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு சிறு பெண் தன் இரண்டு பூனைகளுக்கு ஓவியம் வரைய கற்றுக்கொடுப்பதை வீடியோவில் காண முடிகின்றது. ஓவியம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியையாக மாறிய அந்த பெண் மிக பொறுமையுடன் பூனைகளுக்கு ஓவியம் வரைய சொல்லித் தருகிறார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த பூனைகளும் மிக அமைதியாக, கவனமுள்ள மற்றும் ஒழுக்கமான மாணவர்களைப் போல, வகுப்பில் அமர்வது போல அமர்ந்துள்ளன.
சிறுமி பூனைகளுக்கு ஒரு பூ வரைய கற்றுக்கொடுக்கிறார். மிக அழகாக, ஆர்வமாக அவர் சொல்லித் தருவது காண்பதற்கு மிக நன்றாக உள்ளது. பூனைகளும் எந்த வித சேட்டையும் செய்யாமல் தங்கள் இடத்தில் அமர்ந்து ஓவிய பாடத்தை கவனிக்கின்றன.
இந்த வீடியோ ட்விட்டரில் B&S @_B___S என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது, “சிறுமி தன் பூனைகளுக்கு பூ வரைய கற்றுக்கொடுக்கிறார்” என வீடியோவின் தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஓடுங்க ஓடுங்க...சிங்கம் வருது.. : மாடுகளை காப்பாற்றிய ஹீரோ நாய், வைரல் வீடியோ
அழகான அந்த வீடியோவை இங்கே காணலாம்:
இந்த கியூட்டான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள்.
அவற்றின் சிலவற்றை இங்கே காணாலாம்.
மேலும் படிக்க | உடைந்த நாற்காலி..பென்ஷன் பெற உச்சி வெயிலில் நடந்து செல்லும் மூதாட்டி: வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ