இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெறவுள்ளார் என தகவல்கள் பரவி வருகின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வந்த ஒருநாள் தொடர் நேற்றோடு முடிவடைந்தது. இந்த இறுதி போட்டியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து இத்தொடரையும் வென்றது. இந்நிலையில் நேற்றைய போட்டியின் முடியில் மகேந்திர சிங் டோனி நடுவர்களிடம் இருந்து பந்தை பெற்றுச் செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



இறுதிப் போட்டியாக கருதி, இந்த ஆட்டத்தில் பயன்படுத்திய பந்தினை அவர் பெற்றுச் செல்கின்றாரா?, ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன் என அவர் அறிவித்துவிடுவரா எனவும் சமூக வலைதளங்களில் அவரது ரசிகரகள் விவாதங்கள் நடத்தி வருகின்றனர்.


முன்னதாக கடந்த டிச.,30 2014 அன்று டோனி, தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைப்பெற்று விட்டதாக அறிவித்தார். இதனையடுத்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே விஜயம் செய்த இவர் தற்போது இப்போட்டிகளில் இருந்தும் விடைபெற காத்திருக்கிறாரா என கேள்விகள் எழுந்துள்ளது.


இதற்கு முக்கிய காரணம், இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் டோனி படைத்த சாதனைகளும் தான். கடந்த ஜூலை 14-ஆம் நாள் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் நடைப்பெற்றது. இப்போட்டியில் இந்தியா 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. எனினும் இப்போட்டியில் மகேந்திர சிங் டோனி,. 10000 ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலிலும், 300 கேட்ச் பிடித்த வீரர்களின் பட்டியலிலும் இடம் பிடித்து சாதனை படைத்தார்.


ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இதுவரை 319 போட்டிகளில் விளையாடியுள்ள டோனி 10 சதம், 67 அரைசதத்துடன் 9967 ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம், டோனி ஒருநாள் போட்டிகளில் 10004 ரன்கள் குவித்து 10000 ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். 


இவருக்கு முன்னதாக இந்திய வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் 18,426 ரன்கள், சவ்ரவ் கங்குலி 11363, ராகுல் ட்ராவிட் 10889 குவித்து டோனிக்கு முந்தைய இடம் வகித்து வருகின்றனர்.


அதேப்போல், இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது ஜோஸ் பட்லரின் கேட்சை பிடித்ததன் மூலம் டோனி தனது 300-வது கேட்சினை பதிவு செய்தார். இவருக்கு முன்னதாக ஆடம் கில்கிறிஸ்ட் 417, மார்க் பவுச்சர் 403, சங்கரகாரா 402 ஆகியோர் டோனிக்கு முந்தை இடத்தை தக்கவைத்துள்ளனர்.


இந்த குறிப்பிடதக்கத சாதனைகளுக்கு பின்னர் தனது ஓய்வினை டோனி அறிவித்தாலும் ஆச்சரியங்கள் இல்லை என ரசிகர்கள் ஒருபுறம் தெரிவித்து வருகின்றனர்!