வைரல் வீடியோ: ஒடிசாவின் கட்டாக் நகரில், இளைஞர் ஒருவரை ஸ்கூட்டரில் கட்டி, சாலையில் இழுத்துச் சென்ற விசித்திர சம்பவம் வைரலாகி வருகின்றது. இந்தத் தகவலை போலீஸார் திங்கள்கிழமை தெரிவித்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஓடிசா நகரின் ஷெல்டர் சாக்கில் இருந்து மிஷன் சாலைக்கு ஸ்கூட்டியின் பின்னால் ஒரு இளைஞர் இழுத்துச் செல்வதைக் காணலாம். இதன் பின்னர் கட்டாக் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு இது தொடர்பாக இரண்டு குற்றவாளிகளை கைது செய்தனர். சம்பவத்தின் சரியான நேரத்தை அறிய முடியாவிட்டாலும், இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து கட்டாக் டிசிபி பினாக் மிஸ்ரா கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் கூறிய மிஸ்ரா, “இது மிகவும் முக்கியமான விஷயம் என்பதால், உடனடியாக அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் ஏசிபிகளை விசாரிக்கும்படி கேட்டுக் கொண்டேன். இன்று, இரண்டு குற்றவாளிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டுள்ளோம். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்” என்றார். முதற்கட்ட விசாரணையின்படி, பாதிக்கப்பட்டவருக்கு குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தெரியும், அவர்களிடமிருந்து கொஞ்சம் பணம் கடன் வாங்கியிருந்தார். பலமுறை முயற்சித்தும் பணத்தைத் திருப்பித் தரமுடியவில்லை என்று கூறிய அவர், அவரை ஸ்கூட்டியில் கட்டி வைத்து சிறிது தூரம் இழுத்துச் சென்றுள்ளனர்.


மேலும் படிக்க | போனுக்கு செம சண்டை போடும் குழந்தையும் குரங்கும்: நெட்டிசன்களை சிரிக்க வைத்த வைரல் வீடியோ 



இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் குற்றப் பின்னணியை சரிபார்க்க கூடுதல் விசாரணை நடைபெற்று வருவதாக டி.சி.பி அவர்கள் தெரிவிவித்துள்ளார்.


மேலும் ஒடிசாவில் இதுபோன்ற சம்பவம் இது முதல் முறையல்ல. முன்னதாக, ஜகத்சிங்பூர் மாவட்டத்தில், மொபைல் போன் திருடியதற்கு தண்டனையாக, காலணி மாலை அணிந்து, ஓடும் டிரக்கின் முன் ஒருவர் கட்டப்பட்டார். இதற்கிடையில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகின்றது, அத்துடன் பலர் இந்த வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | தாகத்தில் தவித்த குரங்குகள், தண்ணி கொடுத்து உதவிய நபர்: உருகும் நெட்டிசன்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ