தாகத்தில் தவித்த குரங்குகள், தண்ணி கொடுத்து உதவிய நபர்: உருகும் நெட்டிசன்கள்

Viral Monkey Video: இந்த வீடியோவில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையில் உள்ள இணைப்பு காணக்கிடைக்கிறது. இதைப் பார்த்து பயனர்களின் இதயம் உருகிவிட்டது என்றே சொல்லலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 7, 2022, 06:21 PM IST
  • குரங்குகள் பொதுவாக தங்கள் கூட்டத்துடம் சேர்ந்து வாழும் சமூக உயிரினங்கள்.
  • குரங்குகள் பற்றிய ஒரு சுவாரசியமான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த வீடியோவில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையில் உள்ள இணைப்பு காணக்கிடைக்கிறது.
தாகத்தில் தவித்த குரங்குகள், தண்ணி கொடுத்து உதவிய நபர்: உருகும் நெட்டிசன்கள் title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

குரங்குகள் பொதுவாக தங்கள் கூட்டத்துடம் சேர்ந்து வாழும் சமூக உயிரினங்கள். குரங்குகள் பற்றிய ஒரு சுவாரசியமான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையில் உள்ள இணைப்பு காணக்கிடைக்கிறது. இதைப் பார்த்து பயனர்களின் இதயம் உருகிவிட்டது என்றே சொல்லலாம். இந்த வீடியோ மனித நேயத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

மனித குடியிருப்புகளுக்கு அருகில் வாழும் விலங்குகள் உணவு மற்றும் பானங்களைத் தேடி அலைவதை அடிக்கடி நாம் காண்கிறோம். ​​சில சமயங்களில் சரியான நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் சில மிருகங்கள் இறந்து விடுகின்றன என்பது வருத்தத்துக்குரிய விஷயமாகும். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் காணொளியில், குரங்கு ஒன்று தனது குட்டிகளுடன் வீட்டின் கூரையில் தண்ணீர் தேடி அலையும் காட்சி காணப்படுகிறது. 

மேலும் படிக்க | படுத்தும் குட்டி, பாசத்தோடு பசியாற்றும் அம்மா குரங்கு: செம கியூட்டான வைரல் வீடியோ

தாகத்தில் இருந்த குரங்குக்கு உதவிய நபர்

குரங்குகள் தாகத்தில் அமர்ந்திருப்பதை கண்ட ஒருவர், அவற்றின் தாகத்தை தீர்க்க முயல்கிறார். இதைப் பார்த்து பயனர்களின் இதயம் உருகிவிட்டது. அந்த வீடியோவில், தனது வீட்டின் மேற்கூரையில் குரங்குகள் வந்ததை அறிந்த அந்த நபர், அவற்றின் அருகில் சென்று குழாயில் ஒரு பைப்பை இணைத்து அதன் வழியாக குரங்குகள் குடிக்க தண்ணீர் கொடுக்கிறார். பைப்பின் மூலம் குரங்குகள் தண்ணீர் குடிப்பதையும் வீடியோவில் காண முடிகின்றது. 

வைரலான வீடியோ

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை kajal.kushwah_  என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் 7 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களைப் பெற்றுள்ளது. 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனர்கள் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். மறுபுறம், பெரும்பாலான பயனர்கள் குரங்குக்கு உதவிய நபரைப் பாராட்டி வருகிறார்கள். 

மேலும் படிக்க | அடேங்கப்பா! பெண்ணின் கையிலிருந்த க்ரீமை நக்கும் அபாய விலங்கு: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News