பாம்பு என்றாலே பத்தடி தூரம் ஓடும் நபர்களுக்கு மத்தியில் 15 அடி நீளமுள்ள பாம்பு ஒன்றை அசால்டாக பிடிக்கிறார் ஒருவர். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. வனத்துறை அதிகாரி சுஷாந்த நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோ, இந்தியாவில் எடுக்கப்பட்டுள்ளது என்றாலும், ஆனால் நாட்டின் எந்தப் பகுதியில் எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் அதில் இல்லை. குடியிருப்பு ஒன்றுக்குள் நுழைந்த அந்த பாம்பு சுமார் 15 அடி நீளம் இருக்கிறது. வீட்டில் நிறுத்தியிருந்த காருக்கு அடியில் சென்று ஒளிந்து கொள்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | யானையை கடுப்பேற்றும் நபர்: கன்னாபின்னானு விமர்சிக்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ


இதனைப் பார்த்த அச்சமடைந்த வீட்டில் வசிப்பவர்கள் உடனடியாக பாம்பு இருப்பது குறித்து நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கின்றனர். அவர் வந்ததும் பாம்பு இருக்கும் பகுதியை கேட்டுவிட்டு, காருக்கு அருகே சென்று பாம்பை பிடிக்க முயற்சி செய்கிறார். ஒரே ஒரு நீளமான கம்பியை தவிர வேறு எந்த பாதுகாப்பு உபகரணமும் அவரிடம் இல்லை. இருப்பினும் அந்த நீளம் கம்பியின் துணையுடன் பாம்பை பிடிக்க முயற்சிக்கிறார். அசாதாரணமாக அந்த பாம்பையும் பிடித்துவிடுகிறார்.



வெறும் கையால் அவர் லாவகமாக பிடிக்கப்படும் பாம்பு பின்னர் பாதுகாப்பான வனப்பகுதியில் விடப்பட்டதாக தெரிகிறது. இந்த வீடியோ இப்போது டிவிட்டரில் அதிகமானோரால் பார்க்கப்பட்ட ஒன்றாக உள்ளது. இதேபோன்ற பல வீடியோக்கள் டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கின்றன. இருந்தாலும் எந்த பயிற்சியும் இல்லாமல் பாம்புகளை பிடிக்க முயற்சி செய்வது என்பது ஆபத்தானது ஆகும். நிபுணர்கள் உதவியுடன் பாம்பை மீட்பது மட்டுமே சிறந்த வழி.


இதேபோன்ற மற்றொரு வீடியோவில் ராஜநாகத்தை ஒருவர் தூக்கி வைத்து நெற்றியில் முத்தமிடுகிறார். இது காண்போரை பதற்றத்தின் உச்சத்துக்கே கொண்டு செல்கிறது. இந்த சாகசத்தை செய்த அவர் வேறு யாருமில்லை கேரளாவைச் சேர்ந்த பிரபல பாம்பு மீட்பர் வா வா சுரேஷ். அவர் இதுவரை 38000 பாம்புகளை மீட்டுள்ளார். 3000 முறை பாம்புக் கடியும் வாங்கியுள்ளார் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் அவர் பாம்பு மீட்கும்போது தொடையில் கடிவாங்கினார். அதனால் அபாயகட்டத்திற்குச் சென்று அவர் உயிர் பிழைத்துத் திரும்பினார். 


மேலும் படிக்க | எட்டி எட்டி உதைத்தவரை கடித்து தரதரவென இழுத்துச் சென்ற கழுதை: வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ