வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. உலகில் அனைத்து இடங்களிலும் பாம்புகள் காணப்படுகின்றன. ஆனால், அனைத்து பாம்புகளும் விஷப்பாம்புகள் அல்ல. இதைவிட விசேஷம் என்னவெனில், நாம் இங்கு சாப்பிடும் புடலங்காய், சுரைக்காய் போல, உலகில் பல நாடுகளில் பாம்புகள் உணவின் ஒரு அங்கமாகவும் உள்ளன. ஆயிரம் கூறினாலும், நம் அருகில் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றால், நம் அச்சம் உச்சியைத் தொடும் என்பதை மறுப்பதற்கில்லை. 


தற்போது மிக வித்தியாசமான வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது. அதில் உயிருள்ள பாம்பை கையில் வைத்திருக்கும் நபர் நாம் வெள்ளரி அல்லது கேரட் சாப்பிடுவது போல் பச்சையாக அந்த பாம்பை மென்று சாப்பிடுகிறார். இந்த வீடியோவைப் பார்த்தால், பார்ப்பவர்களுக்கு மிகுந்த ஆச்சரியம் ஏற்படும். பாம்பை சாப்பிடும் நபரின் எக்ஸ்பிரஷனும் மிகவும் விசித்திரமாக உள்ளது. இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த வீடியோ இந்தியாவில்தான் எங்கோ படமாக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | குழந்தையை கொஞ்சும் குரங்குகள், உருகும் நெட்டிசன்ஸ்: மனதை உருக்கும் வைரல் வீடியோ 


பைக்கில் அமர்ந்து உயிருள்ள பாம்பை சாப்பிட்ட நபர்


விலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் வைரலாகி வந்தாலும் இந்த வீடியோ முற்றிலும் வேறுபட்டது. வீடியோவில், பைக்கில் அமர்ந்திருக்கும் ஒருவர் கையில் ஒரு உயிருள்ள பாம்பை வைத்திருப்பதை காண முடிகின்றது. இந்தியாவின் புகழ்பெற்ற ஹீரோ ஹோண்டா பேஷன் பைக்கில் இந்த நபர் அமர்ந்துள்ளார், அதில் இருந்து இந்த வீடியோ இந்தியாவில் எங்கோ படமெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகிறது. 


அந்த வீடியோவில் காணப்படும் நபருக்கு பாம்பு உயிருடன் இருப்பதால் எந்த விதமான பதட்டமோ பயமோ இல்லை. அவர் ஏதோ ஒரு பிரபலமான உணவுப்பண்டத்தை சாப்பிடுவது போல இயல்பாக அதை ருசித்து சாப்பிடுவார். அவரைச் சுற்றி பலர் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். பாம்பை உண்ணும் நபர் இறந்துவிடுவாரோ என்ற அச்சமும் அவர்களது கண்களில் தெரிகிறது. ஆனால் இது எதுவுமே அந்த நபருக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.


பாம்பை சாப்பிடும் விசித்திர நபரின் வீடியோவை இங்கே காணலாம்:



விமர்சித்த மக்கள்


YouTube இல் பகிரப்பட்ட இந்த வீடியோ Gulte.com என்ற சேனலில் பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ கிட்டத்தட்ட 2 வருடங்கள் பழமையானது, ஆனால் இதில் காட்டப்படும் காட்சிகள் உங்கள் மனதை விட்டு அகலாது. இந்த வீடியோவை பார்த்து ஆச்சர்யமடைந்த இணையவாசிகள் பல்வேறு விதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் அவரை பைத்தியம் என்றும், சிலர் அவரை விஷமுள்ளவர் என்றும் அழைக்கிறார்கள்.


மேலும் படிக்க | ஹார்லி டேவிட்சனில் பால் டெலிவரி செய்யும் வைரல் 'அண்ணாமலை' - வீடியோ இதோ...! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ