தாத்தா இது தேவையா? கடுப்பேற்றிய நபர், காண்டான பாம்பு.... வைரல் வீடியோ
Viral Video: இந்த வீடியோவில் ஒரு நபர் பாம்பை தன் பார்வையால் கட்டுப்படுத்த முயற்சிப்பதை காண முடிகின்றது. இந்த வீடியோ இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது என்றே கூறலாம்.
Viral Video: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பாம்பின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் ஆர்வத்துடன் காண்கிறார்கள். பாம்புகளை அருகில் சென்று காண முடியாது என்பதால் இந்த வீடியோக்களின் மூலம் அவற்றின் நடவடிக்கைகளை மிக அருகிலேயே பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைப்பதே இதற்கு காரணமாகும்.
பாம்புகள் மிகவும் ஆபத்தானவை. பாம்பு என்ற பெயரை கேட்டாலே அனைவரையும் பயம் பற்றிக்கொள்ளும். பெரும்பாலான மக்கள் அவற்றிலிருந்து விலகி இருக்கவே முயற்சி செய்கிறார்கள். இருப்பினும், இன்றைய சமூக ஊடக யுகத்தில், சிலர் ஆன்லைனில் பிரபலமடைய தேவையற்ற பல செயல்களை செய்கிறார்கள். பாம்புகளை வைத்து வீடியோ எடுப்பதும் அதில் ஒன்று. இவற்றின் மூலம் தங்கள் வீடியோக்கள் வைரல் ஆகும் என எண்ணும் இந்த நபர்கள் இப்படிப்பட்ட வீடியோக்களில் இருக்கும் ஆபத்தை புரிந்துகொள்வதில்லை.
அப்படி ஒரு வீடியோ தற்போது பிரபலமாகி வருகின்றது. இந்த வீடியோவில் ஒரு நபர் பாம்பை தன் பார்வையால் கட்டுப்படுத்த முயற்சிப்பதை காண முடிகின்றது. இந்த வீடியோ இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது என்றே கூறலாம். இப்படி ஒரு ஆபத்தான வீடியோவை எடுக்க வேண்டிய அவசியம் என்ன என்றே இதை பார்த்தால் தோன்றுகிறது.
வீடியோவின் துவக்கத்தில் ஒரு நபர் அமர்ந்துகொண்டு இருப்பதையும், அவர் முன்னால் ஒரு பெரிய கருநாகம் இருப்பதையும் காண முடிகின்றது. அந்த நபர் பாம்பை நேராக கண்ணில் பார்க்கிறார். வீடியோவை பார்த்தால் அவர் தனது பரவையால் பாம்பை கட்டுப்படுத்த நினைப்பதை புரிந்துகொள்ள முடிகின்றது. அவர் ஏதோ கூறுவதையும் கேட்க முடிகின்றது. ஆனால், இதை பார்க்கும் நமக்கு திக் திக் என்று இருக்கிறது. பாம்பு எப்போது என்ன செய்யுமோ என்ற அச்சம் ஏற்படுகின்றது. அதேபோல் தான் நடகிறது.
மேலும் படிக்க | உணவில் சிறுநீரை கலந்து கொடுக்கும் பணிப்பெண்! அதிர்ச்சியளிக்கும் வீடியோ!
பாம்பிடம் பல்பு வாங்கிய நபரின் வீடியோவை இங்கே காணலாம்
இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் Therealtarzann என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் 1.3 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
"மூடத்தனத்தின் உச்சம்" என்று ஒரு பயனர் அந்த வீடியோ நபர திட்டியுள்ளார். “பாம்புகள் மட்டுமல்ல எந்த மிருகத்தையும் நம்பி இப்படி ஒரு ரிஸ்க் எடுப்பது தவறு” என மற்றொருவர் பயனர் எழுதியுள்ளார். “மக்கள் வீடியோ வைரல் ஆக என்ன வேண்டுமானாலும் செய்வார்களா?” என மற்றொருவர் வியந்துள்ளார்.
(பொறுப்பு துறப்பு: சமூக ஊடகங்களில் வந்த இந்த வீடியோ பொழுதுபோக்கு நோக்கில் மட்டுமே பகிரப்பட்டுள்ளது. இதைப் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.)
மேலும் படிக்க | Snake Yoga: பயம் அதிகம் இருக்கா? இதோ உங்களுக்காக பாம்பு யோகா அறிமுகம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ