உலகில் மில்லியன் கணக்கான உயிரினங்களில் சிலவற்றை பார்த்தாலே பயத்தால் நடுங்க வைக்கும். இந்த விலங்குகளில் ஒன்று பாம்பு. அதில் பல இனங்கள் உள்ளன. இந்த வகைகளில் ஒன்று நாகப்பாம்பு. இது அனைத்து பாம்புகளிலும் மிகவும் விஷமாக கருதப்படுகிறது. வழியில் நாகப்பாம்பை கண்டால் கூட யாருக்கும் வியர்ப்பது இயல்பு. நாகப்பாம்பு மிகவும் விஷமுள்ள பாம்பு மற்றும் அதன் கடி ஒரு மனிதனைக் கூட கொல்லும். ஆனால் சிலர் இந்த பாம்பை பயமின்றி மிக எளிதாக பிடிக்கிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சரக்கடித்து மட்டையான குரங்கு... விளாசித்தள்ளும் நெட்டிசன்ஸ்: ஷாக்கிங் வைரல் வீடியோ


அதனுடன் விளையாடுவதை காணலாம். இந்த வீடியோவில் நீங்கள் பார்ப்பது போல், ஒருவர் ஒன்றல்ல, இரண்டல்ல, ஐந்து ராஜா நாகப்பாம்புகளுடன் விளையாடுவதைக் காணலாம். அந்த வீடியோவில், அந்த நபர் பாம்பின் தலையில் முத்தமிடுவதைக் காணலாம். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் பாம்புகளுக்கு மத்தியில் அமர்ந்து கொள்கிறார். ஒரு பாம்பை பார்த்தாலே பத்து கிலோ மீட்டர் தொலைவுக்கு செல்பவர்கள் இடையே 5 நாகப்பாம்புகள் முன்பு அவர் விளையாடுவதை பார்க்கும்போது உங்களுக்கும் கூட வேர்க்கலாம். 


முதலில் ஒரு பாம்பிடம் சென்று கொத்து வாங்குகிறார். அவர் விளையாடுவதாக நினைத்து தேடிச் தேடி சென்று பாம்பிடம் கொத்து வாங்குகிறார். என்னடா இது பாம்பிடம் கொத்து வாங்குவதை இப்படி குழந்தைகளிடம் வாங்குவதுபோல் வாங்கிறாரே என நினைக்க தோன்றுகிறது. ஒரு பாம்பிடம் தான் கொத்து வாங்குகிறார் என்றால் இன்னும் சில பாம்புகளில் கொத்து வாங்கிறார். அடப்பாவி எதுக்காக இது செய்கிறார் என நினைக்கும்போது, அமைதியாக நடுவில் இருக்கும் பாம்பிடம் சென்று அழகாக முத்தம் கொடுக்கிறார். ஆனால் இப்படிச் செய்வது மிகவும் ஆபத்தானதும் கூட.



இத்தனை பாம்புகள் இருக்கிறது என்றால் நிச்சயம் அவை விஷம் இல்லாதவையாக தான் இருக்கும் என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்துள்ளனர். இன்னும் சிலர் இந்த காணொளியை பார்த்து பலரும் கோபம் அடைந்த நிலையில், சிலர் இந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் படிக்க | இசை எனும் இன்ப வெள்ளத்தை ரசிக்க ஓடோடி வந்த மான் - வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ