பாம்பு வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் நாம் பல வித வீடியோக்களை தினமும் காண்கிறோம். இதில் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் அதிகமாக காணப்படுகின்றன. இவை அனைத்தும் வெளியிடப்பட்ட உடனேயே வைரல் ஆகி விடுகின்றன. அதுவும் பாம்புகளின் வீடியோக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். பாம்புகளின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. பாம்புகளின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. பாம்புகளின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்பை நினைத்தாலே முதலில் வரும் வார்த்தை பயம் தான்! பொதுவாக பாம்புகளை கண்டால் யாரும் அந்த இடத்தில் நிற்பதில்லை. அங்கிருந்து ஓடி விடுவார்கள். அப்படிப்பட்ட பாம்புகளை மிக அருகில் பார்க்க இந்த சமூக வலைத்தள சமூக ஊடக வீடியோக்கள் உதவுகின்றன. பாம்புகள் தொடர்பான பல வித வித்தியாசமான நிகழ்வுகளை நாம் இவற்றில் காண்கிறோம். பாம்பின் அளவு சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, அவை மனிதனின் மனதில் கண்டிப்பாக அச்சத்தை ஏற்படுத்துகின்றன. 


மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ


சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் சமீபத்திய வீடியோவிலும் இதே போன்ற காட்சி காணப்படுகிறது. இந்த வீடியோ உத்தரபிரதேசத்தின் ஷாஜஹான்பூர் மாவட்டத்தை சேர்ந்தது. இங்கு நபர் ஒருவர் பாம்புடன் வீடியோ எடுப்பது அவருக்கு பெரிய விபரீதத்தை ஏற்படுத்தி உள்ளது. வீடியோ படப்பிடிப்பின் போது, ​​அந்த நபரை பாம்பு கடித்ததால், தற்போது அவர் இறந்துவிட்டார். இறந்தவர் மருழலா கிராமத்தின் முன்னாள் கிராமத் தலைவராக இருந்த தேவேந்திர மிஸ்ரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட பாம்புகளை மிஸ்ரா பிடித்துள்ளார். இதன் போது அவர் தனது வீடியோக்களை படமாக்குவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். 


திடீரென பாம்பு கடித்தது
அவர் தனது பக்கத்து வீட்டு ரவீந்திர குமாரின் வீட்டில் இருந்து பாம்பை பிடித்ததாகவும், அந்த பாம்பை பிடித்து வீடியோ எடுக்கும் போது, ​​அவரது பிடியில் இருந்து விடுபட்ட பாம்பு அவரை கடித்ததாகவும் கூறப்படுகிறது. தேவேந்திர மிஸ்ரா பாம்பை கடித்த பிறகு பல்வேறு மூலிகைகள் மூலம் சிகிச்சை அளிக்க முயன்றார், ஆனால் உடலில் விஷம் பரவியதால் அவர் உயிரிழந்தார். 


வீடியோவை இங்கே பாருங்கள்: