வைரல் வீடியோ: மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம். சில விஷயங்கள் அவ்வப்போது நம்மை திசை திருப்பி நமக்கு ஒரு மாறுதலை அளிக்கின்றன. அத்தகைய விஷயங்களில் சமூக ஊடகங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான தொடர்புகளைக் காட்டும் எண்ணற்ற வீடியோக்கள் சமூக ஊடகங்களில்  உள்ளன. சில வீடியோக்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. சில வீடியோக்கள் நமது உள்ளுணர்வைத் தூண்டுகின்றன. அதுவும் நாய், குரங்கு போன்ற விலங்குகள் மனிதர்களிடம் நெருக்கமாக பழகும் விலங்குகளாக உள்ளன.


குரங்கு வீடியோகளுக்கென சமூக ஊடகங்களில் தனி கிரேஸ் உள்ளது. குரங்குகளின் கோமாளித்தனத்தையும் அவை செய்யும் சேட்டைகளையும் இணையவாசிகள் விரும்பி பார்க்கிறார்கள். சமூக ஊடகங்களில் குரங்குகளின் பல குறும்பு வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகின்றன. குரங்குகள் செய்யும் பல வித குறும்புகளை நாம் பல வீடியோக்களில் பார்த்துள்ளோம். சில சமயம் இவை மனிதர்களுக்கு ஆபத்தை விளைவித்து நம்மை பீதியில் ஆழ்த்துகின்றன. சில சமயம் மிக கியூட்டான விஷயங்களை செய்து நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. 


ஒரு மனிதனுக்கும் குரங்குக்கும் இடையேயான அழகான பிணைப்பைக் காட்டும் இதயத்தைத் தூண்டும் வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலாகி வருகிறது. அந்த நபர் தனது தோழர்களுடம் பகிர்ந்துகொள்வது போல ஒரு தர்பூசணி பழத்தை மிக அழகாக அந்த குரங்குடன் தாராளமாக பகிர்ந்து கொள்ளும் மகிழ்ச்சியான தருணத்தை இந்த வீடியோ படம் பிடித்துள்ளது. இந்த வீடியோ நெட்டிசன்களை இதயங்களைத் தொட்ட ஒரு எளிமையான வீடியோவாக உருவெடுத்து வைரல் ஆகி வருகின்றது. 


மேலும் படிக்க | Viral Video: கில்லாடிம்மா நீ... சண்டையிட்ட பூனைக்குட்டியை குழப்பிய நாய்!


இந்த வீடியோவின் துவக்கத்தில் ஒரு பெரிய தர்பூசணி பழத்துக்கு ஒரு பக்கம் ஒரு நபரும் மறுபக்கம் ஒரு குரங்கும் இருப்பதை காண முடிகின்றது. அந்த நபர் தர்பூசணியை இரண்டு துண்டுகளாக வெட்டத் தொடங்குகிறார். ஆனால் அதற்குள் பழத்தை சாப்பிடும் ஆர்வம் குரங்குக்கு அதிகமாகிறது. ஆனாலும், அது பொறுமையாக காத்துக்கொண்டு இருக்கிறது. அந்த நபர் தர்பூசணியை வெட்டி குரங்குக்கு ஒரு சுவையான துண்டை சாப்பிட கொடுக்கிறார். இருவரும் புத்துணர்ச்சியூட்டும் பழத்தை ஒன்றாக அனுபவித்து சாப்பிடுகிறார்கள். இந்த காட்சி பார்ப்பதற்கு மிக அழகாகவும் கியூட்டாகவும் இருக்கிறது. 


குரங்குடன் ஒரு நபர் தர்பூசணி பழத்தை ருசிக்கும் வைரல் வீடியோவை இங்கே காணலாம்:



வீடியோ இணையத்தில் வைரல் ஆனது


இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் Buitengebieden என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. ‘ஒன்றாக தர்பூசணி சாப்பிடும் நேரம்’ என இதன் தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு 1.5 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


“அழகான வீடியோ! வாழைப்பழங்களை மறந்துவிடாதீர்கள் நண்பர்களே” என்று ட்விட்டர் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், “அந்த குரங்குக்கு எவ்வளவு பொறுமை.. ஆர்வம்!” என வியந்துள்ளார். "குரங்கின் பொறுமைக்கான பரிசு” என மற்றொரு பயனர் கூறியுள்ளார். 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | டைனாசரிடம் மாட்டிய தந்தையின் தலை: அழுத குழந்தையில் ரியாக்‌ஷன், சான்சே இல்ல..வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ