Viral Video: கில்லாடிம்மா நீ... சண்டையிட்ட பூனைக்குட்டியை குழப்பிய நாய்!

Funny Viral Video of Dog Vs Cat: சமூக ஊடகத்தில் பகிரப்படும் சில வேடிக்கையான, அரிய தருணங்களை காட்டும் வீடியோக்கள் நம் மனதை மிகவும் லேசாக்கி விடும்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 2, 2023, 11:54 AM IST
  • நாயும் பூனையும் பரஸ்பரம் சண்டையிடும் காட்சிகள் அடங்கிய வீடியோ.
  • சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன.
  • பூனைகளுக்கும் நாய்களுக்கும் இடையிலான நட்பை வெளிப்படுத்தும் தருணங்கள் பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும்.
Viral Video: கில்லாடிம்மா நீ... சண்டையிட்ட பூனைக்குட்டியை குழப்பிய நாய்! title=

சமூக ஊடகத்தில் பகிரப்படும் சில வேடிக்கையான, அரிய தருணங்களை காட்டும் வீடியோக்கள் நம் மனதை மிகவும் லேசாக்கி விடும். அன்றாட டென்ஷன்களில் இருந்து தப்பிக்க இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள் நமக்கு பெரிய வளவில் உதவுகின்றன. இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. பூனைகளுக்கும் நாய்களுக்கும் இடையிலான நட்பை வெளிப்படுத்தும் தருணங்கள் பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். இப்படி ஒரு காணொளியை பார்த்தால் மக்களின் மனநிலை நேர்ம்றை எண்ணங்கள் நிறைந்து இருக்கும். தற்போது ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வரும் வீடியோவில் நாயும் பூனையும் பரஸ்பரம் சண்டையிடும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி ரசிகர்களுக்கு சிரிப்பை வரவழைத்துள்ளது.

வைரலாகும் வீடியோவில் உள்ள காட்சிகளில், நாய் ஒன்று பூனைக்குட்டியின் எதிரே உள்ளதை காண்லாம். இரண்டு செல்ல பிராணிகள் என்பதையும் நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம். அதில் நாய்க்கும் பூனை குட்டிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல் மிகவும் சுவாரஸ்யமானது. முதலில் இரண்டு இடையே ஏதோ மோதல் வெடித்த நிலையில், நாயும் பூனையும் கட்டிப் புரளுகின்றன. ஆனால், நாய் என்ன நினைத்ததோ, உடனை தன்னை விடுவித்துக் கொண்டு, மிக வேகமாக சுழலுகிறது. அதனை பார்த்த பூனை புரியாமல் குழம்புகிறது.

சமூக வலைதளத்தில் வைரலாகும் நாய் குட்டி - பூனைக்குட்டி வீடியோவைக் கீழே காணலாம்:

 

 

இந்த வீடியோ வெளியான ஒரு நாளிலேயே ட்விட்டரில் 11.9 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த இரண்டு விலங்குகளுக்கும் இடையிலான மோதலையும், வேடிக்கையான தருணங்களையும் கண்டு மகிழ்ந்து பலர் ஆச்சரியப்பட்டு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பூனையை குழப்பும் நாயின் புத்திசாலித்தனம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. 

சில நாட்களுக்கு முன் இதே போல வைரலான பூனை வீடியோவில், அழகான பூனை குட்டி ஒன்று தாய் பூனையிடன் வசமாக வாங்கிக் கட்டிக் கொண்டதை காணலாம். சில நேரங்களில் விலங்குகளின் நடத்தை மனிதர்களைப் போலவே இருக்கிரது ஆச்சரியத்தை கொடுக்கிறது. குறிப்பாக தாய்மார்கள். குழந்தைகளை காப்பாற்றுவது அல்லது அவர்களைத் தண்டிப்பது ஆகட்டும், விலங்குகள் ஆனாலும், மனிதர்கள் ஆனாலும் அவர்களின் தன்மை மாறுவதே இல்லை. தாய்மார்கள் ஈடு இணையில்லாத அன்பு மற்றும் அக்கறையின் உருவகம். வைராகும் வீடியோவை கீழே உள்ள இணைப்பில் கண்டு ரசியுங்கள். Ninja dog என்ற தலைப்பில் இந்த வீடியோ, Buitengebieden (@buitengebieden) என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | Viral Video: இனி வீட்டை விட்டு போவியா... பூனை குட்டியை பின்னி பெடலெடுத்த தாய் பூனை!

விலங்குகள், குறிப்பாக வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் தினம் தினம் மனிதர்களை பரவசத்துக்கு ஆளாக்குபவை. . செல்ல பிராணிகள் செய்யும் குறும்புகள், செயல்கள் எல்லாமே ரசிக்கும்படி இருப்பவை. எப்போதும் நமக்கு ஆச்சர்யங்களையும், ஆனந்த அதிர்ச்சிகளையும் அள்ளிக் கொடுக்க வல்லன. அதிலும் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் நமது வீட்டின் ஒரு அங்கத்தினர் போல் ஆகி விடுகிறது என்றால் மிகையில்லை. அதில் நாய்களும் பூனைகளும் முதலிடம் வகிக்கின்றன. 

மேலும் படிக்க | கலிகாலம் தான்... நூடுல்ஸ் போல் பாம்பை உயிருடன் கபளீகரம் செய்யும் தவளை... திகிலூட்டும் வீடியோ!

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News