வைரல் வீடியோ: இணைய உலகில் பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரங்கு, பாம்பு, நாய், புலி, சிங்கம் ஆகிய விலங்குகள் பற்றிய பல வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவற்றிடன் மனிதர்கள் காட்டும் சில வித்தைகளின் வீடியோக்களையும் அவ்வப்போது காண முடிகின்றது. சிலர் உயிரை பணயம் வைத்து இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.


இந்த வீடியோவில், ஒரு நபர், உயிருள்ள பாம்பை தனது கைகளில் பிடித்து விழுங்க முயற்சிப்பதைக் காண முடிகின்றது. இந்த வீடியோவில் நாம் காணும் காட்சிகள் நம்மை சிலிர்க்க வைக்கும் வகையில் உள்ளன. இந்த வீடியோ பல்வேறு தளங்களில் வைரலாகி வருகிறது.


பாம்பை உயிருடன் விழுங்கிய நபர் 


வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு நபர் தனது தோழர்களுடன் திறந்தவெளியில் இருப்பதைக் காண முடிகின்றது. சிறிது நேரம் கழித்து அவர் ஒரு உயிருள்ள பாம்பை கொண்டு வந்து அனைவருக்கும் காட்டுகிறார். பின்னர், அவர் மற்றவர்கள் முன்னிலையில் ஏதாவது செய்து பெருமை ஈட்ட முயல்கிறார். ஆகையால், அனைவருக்கும் முன்னால் அவர் உயிருடன் பாம்பை விழுங்கத் தொடங்குகிறார். ஆனால் இறுதியில் பாம்பு அவரது நாக்கைக் கடித்து விடுகிறது.


மேலும் படிக்க | வெள்ளை புலியை கடுப்பேற்றிய இளம் பெண்! அப்புறம் என்ன நடந்துச்சு தெரியுமா?


சிலிர்க்க வைக்கும் வீடியோவை இங்கே காணலாம்:



நமக்கு தீங்கு விளைவிக்காத எந்த ஒரு உயிரினத்தையும் துன்புறுத்துவது தவறு. அந்த தவறைதான் இந்த நபர் செய்கிறார். ஆனால், அதற்கான பலனையும் அவர் அனுபவித்து விடுகிறார். இந்த வீடியோ டெய்லி மெயில் மூலம் பதிவேற்றப்பட்டது. இதை @Ratnesh191298 என்ற ட்விட்டர் பயனர் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். பாம்பை தேவை இல்லாமல் தொந்தரவு செய்த நபரை பலர் விமர்சித்து வருகிறார்கள். 


மேலும் படிக்க | ஆத்தாடி இவ்ளோ பெரிய பாம்பா..கிடுகிடுன்னு ஏறுது பாருங்க: வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ