உங்க சிரிப்புக்கு நாங்க கேரண்டி: வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ
Funny Viral Video: ‘என்னய்யா நடக்குது இங்க?’ என அனைவரையும் ஒரு வீடியோ கேட்க வைத்துள்ளது. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் இந்த வீடியோ வைரல் ஆகி வருகின்றது.
வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
மிருகங்கள் மனிதர்களை தாக்கும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவை பார்ப்பதற்கு பீதியை கிளப்பும் வகையில் இருப்பது வழக்கம். எனினும், ஒரு மிருகம் தன்னை தாக்குமோ என்ற அச்சத்தில் இருக்கும் ஒரு நபரது வீடியோ பயங்கரமாக சிரிப்பை வரவழைக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம், அப்படி ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.
நாம் பொதுவாக சாலையிலோ அல்லது பிற இடங்களிலோ இருக்கும்போது மிருகங்களை எதிர்கொண்டால், நமக்கு ஒரு வகை அச்சம் ஏற்படும். மிருகம் நம்மை தாக்குமோ என்ற கவலையும் பயமும் இருக்கும். அதுவும் அந்த மிருகம் பெரிய காளையாக இருந்தால், நம் அச்சத்திற்கு அளவே இருக்காது. ஒரு காளை மனிதர்களுக்கு பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது நாம் அறிந்ததே. காளைகள் தாக்கி பலர் உயிர் இழந்த சம்பங்களும் உள்ளன.
தற்செயலாக ஒரு காளையின் எதிரே வந்த ஒரு மனிதனின் இக்கட்டான நிலையை சித்தரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. பெரிதாக இருக்கும் அந்த காளை மாட்டை தொந்தரவு செய்யாமல் அதனிடமிருந்து விலகிச் செல்ல அந்த நபர் வெகுவாக முயற்சிப்பதை வீடியோவில் காண முடிகின்றது. அந்த நபர் மிக மெதுவாக, சிறிய அடிகளை எடுத்து வைத்து மிக ஜாக்கிரதையாக நகர்கிறார். தான் பாதுகாப்பான தூரத்துக்கு வந்து விட்டோம் என தெரிந்துகொண்ட பின்னர் அங்கிருந்து ஓடத் தொடங்குகிறார்.
ஆனால் இதன் பிறகுதான் சுவாரசியமே உள்ளது. அந்த காளை அந்த நபரை துரத்தும், அல்லது தான் பாட்டுக்கு அந்த இடத்திலேயே இருக்கும் என நினைத்துக்கொண்டிருக்கும் நமக்கும், அந்த நபருக்கும் பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது. அந்த நபர் ஒரு புறம் ஓட்டமெடுக்க, காளையும் மறுபுறம் ஓடுகிறது. இதை பார்த்தவுடன் நம்மால் சிரிக்காமல் இருக்க முடியாது. இந்த காட்சி நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.
மேலும் படிக்க | தலைக்கு தில்ல பாத்தியா..நடுரோட்டில் மாணவிகளிடம் இப்படியா செய்றது: வீடியோ வைரல்
செம காமெடி வீடியோவை இங்கே காணலாம்:
இந்த வீடியோவின் துவக்கத்தில் காளையை பார்த்து அந்த நபர் பயந்தது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், வீடியோவின் முடிவில், யார் யாரைப் பார்த்து பயந்தார்கள் என்பதையே புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த வீடியோவில் அந்த நபருக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றாலும், பொதுவாக மிருகங்களை தொந்தரவு செய்யாமல் இருப்பதே நல்லதாகும்.
இந்த வீடியோ ட்விட்டரில் @ProfesorCaos5 என்ற பதிவில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளதோடு இணையவாசிகளும் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள்.
மேலும் படிக்க | Viral Video: சாப்பிடு செல்லம்! ஆமை நண்பனைக் கொஞ்சும் சிம்பன்சி வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ